உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட அம்பாறை மாவட்ட வேலையில்லா தமிழ் பட்டதாரிகள் 7 பேர் வைத்தியசாலையில்

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

கிழக்கு மாகாண சபைக்கு முன்னால் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டிருந்த அம்பாறை மாவட்ட வேலையில்லா தமிழ் பட்டதாரிகள் 7 பேர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்’.

இவர்கள் நேற்று சுகயீனமடைந்த நிலையில் திருகோணமலை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

4ஆவது நாளாகவும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டிருந்த நிலையிலேயே சுகயீனமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

கிழக்கு மாகாணத்திற்கு உட்பட்ட பகுதிகளில் காணப்படும் அரச வெற்றிடங்களுக்கு தங்களை நியமிக்குமாறு கோரி அம்பாறை மாவட்ட வேலையில்லா தமிழ் பட்டதாரிகள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*