தந்தை செல்வாவின் தீர்வு வட்டுக்கோட்டை தீர்மானமே!

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

தந்தை செல்வா ஏற்காத தீர்வை தான் ஒருபோதும் ஏற்கப்போவதில்லை என்று தமிழரசுக் கட்சியின் பெருந்தலைவர் இரா.சம்பந்தன் ஒப்புவித்துள்ளார்.

தந்தை செல்வா அவர்களின் காலத்தில் இந்நாட்டை ஆண்ட இரண்டு பிரதமர்களுடனும் செய்துகொண்ட ஒப்பந்தங்கள் பயனற்றுப்போன பின்பு பல்வேறு வழிகளிலும் தமிழ் மக்களுக்கான தீர்வைக்காண முயன்று தோற்ற நிலையில் வட்டுக்கோட்டை தீர்மானத்தை முன்மொழிந்து நிறைவேற்றினார்.

அப்படியென்றால் இரா.சம்பந்தன் அவர்களும் அந்த தீர்மானத்தின் அடிப்படையிலான தீர்வையே வலியுறுத்துகிறாரா? என்ற கேள்வி இன்று தமிழ் புத்திஜீவிகள், அரசியல் அவதானிகள் மற்றும் சிங்கள முற்போக்கு ஜனநாயக சக்திகளிடமும் கூட பூதாகரமாக எழுந்துள்ளது.

இலங்கை அரசுடன் ஒத்துழைத்து செயற்படுவோம் என்று கூறிவிட்டு யாழ்ப்பாணத்திற்கு வந்தவுடன் முழுவதும் தமிழ் மக்கள் வாழ்கின்ற பிரதேசத்தில் அந்த மக்களைத் திருப்திப்படுத்துவதற்காகவும் இளைஞர்களின் உணர்ச்சியைத் தூண்டுவதற்காகவும் இவ்வாறு பேசுகிறாரோ என்ற சந்தேகமும் அவர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

ஐ.நா மனித உரிமை ஆணையகத்தின் அறிக்கையை நீர்த்துப் போகச்செய்வதில் தாம் பெரும்பங்காற்றியதால் கோபத்தில் இருக்கும் தமிழ் மக்களை திசைதிருப்புவதற்காக இப்படி உணர்ச்சிவசப்பட்ட பேச்சுக்களைப் சம்பந்தன் பேசுகிறாரோ என்று மற்றுமொரு சாரார் கேள்வியெழுப்புகின்றனர்.

ஒட்டுமொத்தத்தில் திரு.சம்பந்தன் அவர்களின் நிலை இடியாப்பச் சிக்கல்போல ஒன்றுமே புரியவில்லை என்று தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தர்கள்கூட முணுமுணுப்பதைக் காணமுடிகின்றது. அவரது கட்சிக்காரர்களுக்கே இதுதான் நிலைமை என்றால் அங்கத்துவக் கட்சிகளின் நிலையைப் பற்றிச் சொல்லவேண்டியதே இல்லை என்று கூட்டமைப்பின் நலன்விரும்பிகள் அங்கலாய்க்கின்றனர்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*