வெகுவிரைவில் சி.வியிடம் விளக்கம் கோருவேன் -இரா.சம்பந்தன் (குரல் இணைப்பு)

பிறப்பு : - இறப்பு :

தேர்தல் காலத்தில் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வெளிப்படுத்திய கருத்துக்கள் மற்றும் அவரின் செயற்பாடுகள் குறித்து விரைவில் அவரைச் சந்தித்து விளக்கம் கோரவுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் குறிப்பிட்டார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அத்துடன் தேர்தல் காலத்தில் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வெளிப்படுத்திய கருத்துக்கள் மற்றும் அவரின் செயற்பாடுகள் குறித்து விரைவில் அவரைச் சந்தித்து விளக்கம் கோரவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஐநா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானமானது, சர்வதேச பங்களிப்புடனான விசாரணையையும் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வையும் வலியுறுத்தியிருப்பதனால் தமிழ் மக்கள் தமது இலக்கை அடைவதற்கு ஒரு வழி பிறந்திருப்பதாகஎதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் குறிப்பிட்டார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit