கவுதமாலாவில் நிலச்சரிவில் சிக்கிய 30 பேர் பலி: சுமார் அறுநூறு பேர் மாயம்

பிறப்பு : - இறப்பு :

மத்திய அமெரிக்காவின் கவுதமாலாவில் கடந்த வியாழக்கிழமை ஏற்பட்ட நிலச்சரிவில் முப்பதுக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். மேலும், அறுநூறுக்கும் மேற்பட்டோரை காணவில்லை என்று தெரியவந்துள்ளது.

தலைநகர் கவுதமாலா சிட்டிக்கு மிக அருகிலுள்ள எல் காம்ப்ரே தோஸ் என்கிற மலைக் கிராமத்தில், பெய்த கனமழையால் அங்கிருந்த பெரிய பாறைகள் வெள்ளத்தில் சகதியுடன் அடித்துச் செல்லப்பட்டு, குடியிருப்புகளின் மீது சரிந்து விழுந்தது.

இதனைத்தொடர்ந்து, மீட்பு பணியாளர்கள் விரைந்துவந்து மண்ணுக்கு அடியில் சிக்கியவர்களை மீட்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இதுவரை முப்பதுக்கும் அதிகமான உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும், சுமார் ஐம்பது பேர் இடிபாடுகளிலிருந்து உயிருடன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

எனினும், சுமார் 600-க்கும் மேற்பட்டோர் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளதாக அஞ்சப்படுகின்றது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit