இலண்டன் நம்பிக்கை ஒளி தன்னார்வ தொண்டு நிறுவனத்தினால் கிளி இந்து ஆரம்ப பாடசாலை மாணவர்களுக்கு இலவசசீருடைவழங்கும் நிகழ்வு

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு வறுமைக்கோட்டின் கீழ் வாழ்ந்துவரும் கிளி இந்து ஆரம்பபாடசாலையில் தெரிவுசெய்யப்பட்ட 130 மாணவர்களுக்கு தலா இரண்டு சோடி சீருடைகள் வழங்கி வைக்கப்பட்டது.

முற்று முழுதாக யுத்த இழப்புக்களை சந்தித்தமாணவர்கள் கல்விகற்கும் இப் பாடசாலையில் கல்விகற்கும் மாணவர்களின் குடும்பபின்னனி மிகவும் மோசமானது. குறிப்பாகஅன்றாடம் கூலிவேலை செய்து தமது பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பும் பெற்றோர்களே இப் பாடசாலையை சூழ்ந்தபிரதேசத்தில் வாழ்ந்து வருகின்றார்கள், கல்வித் திணைக்களத்தினால் ஒருவருடத்துக்கு ஒரு முறையே சீருடை வழங்கப்படுகின்றது. இந்த சீருடை இம் மாணவர்களுக்கு போதியதாக இல்லை ,ஒரு சீருடையை தெடர்ச்சியாக அணிவதால் சீருடை கபில நிறமாக மாறிவிட்டது பணம் கொடுத்து சீருடை வாங்குமளவுக்கு வசதியில்லாத மாணவர்கள் கிழிந்த சீருடைகளையே அணிந்து பாடசாலைக்கு வருவதாக பாடசாலை அதிபர் இலண்டன் நம்பிக்கை ஒளிநிறுவனத்துக்கு தெரியப்படுத்தினர்.

அதனைத் தொடர்ந்து நம்பிக்கை ஒளிநிறுவனத்தின் இணைநிறுவனமாக தாயகத்தில் இயங்கும் இணைக்கும் இதயங்கள் அறக்கட்டளைஊடாக 30.09.2015ம் திகதிகாலை 10.00 மணிக்குபாடசாலைமண்டபத்தில் இலவசசீருடைவழங்கும் நிகழ்வு இடம் பெற்றது.

இந் நிகழ்வில் இப்பாடசாலைஅதிபர் கணேசமூர்தி, உட்பட ஆசிரியர்கள், பெற்றோர்கள், இணைக்கும் இதயங்கள் அறக்கட்டளைசார்பில் ப. சுபாஸ்கரன், கோ.ரூபகாந், பா.வினோ, ஜெ.ஜினோஜன் உட்படபலரும் கலந்துகொண்டுதரம் ஒன்றுமுதல் தரம் ஐந்துவரையானவறுமைக் கோட்டுக்குகீழ் கல்விகற்கும் மாணவர்களுக்கு இலவசசீருடைகள் வழங்கிவைக்கப்பட்டது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*