சிவப்பு பூ பிடிக்காது – கிணற்றில் விழுந்து இளைஞன் பலி

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

தலவாக்கலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தெவிஸ்ரீபுர கிராமத்தில் 30.09.2015 அன்று காலை 40 அடி ஆழமான பாழடைந்த கிணற்றில் தவறி விழுந்து 31 வயதுடைய இளைஞன் உயிரிழந்துள்ளார்.

பிறவியில் மனநிலை பாதிக்கப்பட்ட அமில டீ சில்வா என்பவரே உயிரிழந்தவர் என பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
சிவப்பு பூவை கண்டால் ஆத்திரம் கொண்டு பிடிங்கி கசக்கி எறிவது இவரின் செயற்பாடாக இருந்து வந்தநிலையில் 30.09.2015 அன்று காலை சம்பவ இடத்தில் சிவப்பு பூ ஒன்றை பிடுங்க சென்ற வேலையில் பாழடைந்த கிணற்றில் மேல் போடப்பட்டிருந்த சல்லடை கம்பியில் கால் வைக்க முற்பட்ட போது தவறி விழுந்து இவ்வாறு உயிரிழந்துள்ளதாக சம்பவத்தை நேரில் பார்வையிட்டவர்கள் தலவாக்கலை பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் மற்றும் மேல் கொத்மலை மின்சார சபையினரின் உதவியுடன் 40 அடி ஆழத்திலிருந்து மீட்கப்பட்ட சடலத்தை பிரேத பரிசோதனைக்காக லிந்துலை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு பின்னர் மேலதிக பரிசோதனைக்காக நுவரெலியா ஆதார வைத்தியசாலைக்கு 12 மணியளவில் கொண்டு செல்லப்பட்டது.

உயிரிழந்தவரின் மரண விசாரணை நுவரெலியா வைத்தியசாலை திடீர் மரண விசாரணை அதிகாரி முன் இடம்பெற்றது. இதில் மூச்சு தினறி திடீர் மரணம் ஏற்பட்டதாக தலவாக்கலை பொலிஸ் சூழல் பாதுகாப்பு பிரிவின் அதிகாரி வீ.சுந்தர்ராஜ் தெரிவித்தார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*