வெருகலம்பதி சித்திரவேலாயுத சுவாமி ஆலய மஹோற்சவ ஆன்மீக பாதயாத்திரை

பிறப்பு : - இறப்பு :

மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை வருடா வருடம் நடாத்தும் வெருகலம்பதி சித்திரவேலாயுத சுவாமி ஆலய மஹோற்சவ ஆன்மீக பாதயாத்திரையின் முதலாவது நாள் சனிக்கிழமை மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தில் இருந்து ஆரம்பமாகியது.

மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டங்களின் எல்லையாக இருந்து திருவருள் பாலித்துக் கொண்டிருக்கும் வெருகலம்பதி ஸ்ரீ சித்திரவேலாயுதர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தை முன்னிட்டு சனிக்கிழமை காலை மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தில் இருந்து ஆரம்பமாகிய பாத யாத்திரை ஆறு நாட்கள் யாத்திரை இடம்பெற்று எதிர்வரும் 01ம் திகதி பிற்பகல் வெருகலம்பதி சித்திரவேலாயுதர் ஆலயத்தை சென்றடையவுள்ளது.

இப்பாத யாத்திரையானது மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை தலைவரும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான சீனித்தம்பி யோகேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது.

யாத்திரையில் பேரவை பிரதிநிதிகள், இந்து அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொதுமக்கள் என நூற்றுக் கணக்கானோர் கையில் நந்திக் கொடி ஏந்தியவாறு ஆரோகரா கோசத்துடன் கலந்து கொண்டனர். இப்பாத யாத்திரையானது பிரதான வீதி வழியாக உள்ள அனைத்து ஆலயங்களுக்கும் சென்று தரிசனம் செய்யப்படும்.

இப்பாத யாத்திரையில் கலந்து கொள்ளும் பக்த அடியார்களும் வெருகலம்பதி சித்திரவேலாயுத சுவாமி ஆலயம் சென்றடையும் வரை உணவு வசதிகள் வழங்கி வைக்கப்படும் என ஏற்பாட்டாளர் தெரிவித்தார்.

இப்பாத யாத்திரையில் கலந்து கொள்ளும் பக்த அடியார்களை கலந்து கொண்டு முருகனின் அருளைப் பெற வருமாறும் கேட்டுக் கொள்கின்றனர்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit