பொல்லால் அடித்து படுகாயம் ஏற்படுத்தியவருக்கு விளக்கமறியல்

பிறப்பு : - இறப்பு :

அக்கரைப்பற்று – ஒலுவில் பிரதேசத்தில் குடும்பஸ்தர் ஒருவரை பொல்லால் அடித்து படுகாயம் ஏற்படுத்தியவரை எதிர் வரும் 6ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது,

ஒலுவில் -7 பழைய தபாலக வீதியைச் சேர்ந்த முஹம்மது இஸ்மாயில் மீராலெப்பை (56வயது) என்பவரை அவரது உறவினரான 29 வயதுடைய நபரெருவர் நேற்றிரவு பொல்லால் தாக்கியுள்ளார்.

சம்பவத்தில் பலத்த காயங்களுக்குள்ளான நபர் அக்கரைப்பற்று ஆதார வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் அம்பாறை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக கண்டி வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதன் பின்னர் பொலிஸார் சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit