தமிழின அழிப்புக்கு நீதி கோரி பட்டொளி வீசும் தேசியக் கொடியோடு ஐநா திடலில் ஒன்றுகூடுவோம்

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

தமிழின அழிப்புக்கு நீதி கோரி பட்டொளி வீசும் தேசியக்கொடியோடு மனிதநேய ஈருருளிப் பயணம் இன்று மதியம் 14 மணிக்கு ஐநா திடலை வந்தடைய இருக்கிறது . கடந்த 31.08.2015 அன்று பிரித்தானியாவில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட ஈருருளிப் பயணம் கடந்த 21 நாட்களாக பல்வேறு ஐரோப்பிய நாடுகளை ஊடறுத்து பல்லின மக்களுக்கும் , அரசாங்கத்துக்கும் தமிழின அழிப்பை எடுத்துரைத்து நீதி கோரி ஐநா வை நோக்கி செல்கின்றது .

இலங்கை தொடர்பான ஐநா அறிக்கை வலுவாக அமையவேண்டும், அனைத்துலக சுயாதீன விசாரணை மட்டுமே ஈழத்தமிழர்களுக்கு உண்மையான நீதியை நிலை நாட்டும் என ஓங்கிக் குரல்கொடுப்போம் .

இன்றைய தினம் கனடா தேசத்திலும் நீதிக்கான போராட்டம் நடைபெற இருக்கிறது ., சமநேரத்தில் தமிழகத்திலும் பல்வேறு நகரங்களிலும் தமிழின அழிப்புக்கு நீதி கோரி மாபெரும் போராட்டங்கள் நடைபெற இருக்கிறது .

கோரிக்கைகள் :

1. பல தசாப்தங்களாக, இலங்கைத்தீவில் சிங்கள அரசினால் தொடர்ந்து நடத்தப்படும் தமிழினப்படுகொலையை ஆராய்ந்து, ஐக்கிய நாடுகள் அவை மார்ச், 2011இல் வெளியிட்ட அறிக்கைக்கு நீதி கிடைக்கும் பொருட்டு அனைத்துலக குமூகம் அனைத்துலக நீதிமன்றில் விசாரணையை நடாத்தி தமிழ்மக்களுகக்கான நீதியைப் பெற்றுக்கொடுக்க வேண்டும்.

2. ஈழத்தமிழ்த் தேசிய இனத்தைச் சேர்ந்தவர்கள் என்ற காரணத்திற்காகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களைச் சிறீலங்கா அரசு உடனடியாக விடுதலை செய்வதோடு, தமிழர் தாயகமாகிய இலங்கைத்தீவின் வடக்கு, கிழக்குப் பகுதிகளில் தமிழ்மக்கள் சுதந்திரமாக வாழக்கூடிய விதத்தில் முதற்கட்டமாக அங்கு ஆக்கிரமித்துள்ள சிங்களப் படை வெளியேற்றப்பட்டு தமிழர் நிலப்பறிப்பு உடன் நிறுத்தப்பட்டு இயல்பு வாழ்க்கை உருவாக்கப்படவேண்டும்.

3. இலங்கைத் தீவின் வடக்கு, கிழக்குப் பகுதிகளை பாரம்பரிய நிலமாகக் கொண்ட தமிழீழ மக்களின் தாயகம், தேசியம், தன்னாட்சி என்பவற்றை ஐக்கிய நாடுகள் அவை (அனைத்துலகம்) அங்கீகரிக்கவேண்டும்.

4. பேச்சு மற்றும் ஊடகச் சுதந்திரம் வழங்கப்பட்டு, தமிழீழ மக்கள் தமது அரசியல் பெருவிருப்புக்களை வெளிப்படுத்தக் கூடிய விதத்தில் ஐக்கிய நாடுகள் அவையின் கண்காணிப்பில் தமிழர் தாயகத்தில் வாக்கெடுப்பு நடத்தப்படவேண்டும். அதேவேளை புலம்பெயர் தமிழீழ மக்களும் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளக் கூடிய வாய்ப்பையும் ஐக்கிய நாடுகள் அவை ஏற்படுத்திக் கொடுக்கவேண்டும்.

5. மூன்று தசாப்தகாலமாக எமது மக்களையும் எமது மரபுவழித் தாயகத்தையும் பாதுகாத்து, அனைத்துலகச் சட்டங்களை மதித்து, நடைமுறை அரசை நிறுவிய எமது விடுதலை இயக்;கமான தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பினால் மட்டுமே தொடர்ந்தும் எமது மக்களையும் எமது நிலத்தையும் பாதுகாக்க முடியும். ஆகவே இவ்வமைப்பை எமது விடுதலை இயக்கமாக அனைத்துலக குமூகம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*