ஐ.நா. மனித உரிமை அறிக்கை சர்வதேச விசாரணைக்கு வழிவகுக்கும்

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

ச.வி.கிருபாகரன் – ஐ.நா. ஜெனீவாவிலிருந்து

தமிழ் தந்தி, கொழம்பு, 20-09-2015 – ஜெனீவவாவில் நடைபெற்று கொண்டிருக்கும் ஐ.நா. மனித உரிமைச் சபையின் 30 ஆவது கூட்டத் தொடர் கடந்த திங்கட்கிழமை 14ஆம் திகதி ஐ.நாவிற்கான ஜேர்மன் நாட்டின் தூதுவர் ஜோர்ச்சி மநுக்கர் தலைமையில் ஆரம்பமாகியது.

கூட்டத்தொடர் ஆரம்பமாகியதைத் தொடர்ந்து ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் உரையாற்றுகையில் ஸ்ரீலங்கா பற்றிய விசாரணையின் அறிக்கை 16ஆம் திகதி புதன்கிழமை ஆரம்பமாகவுள்ளதாக அறிவித்தார். இதனை தொடர்ந்து ஸ்ரீலங்காவின் வெளிநாட்டு அமைச்சர் மங்கள சமரவீர, பிரித்தானியாவின் அமைச்சர் ஐரோப்பிய யூனியன் சார்பாக லக்சம்பேர்க் மசினோடிய குடியரசு ஆகியோரும் சில அரசசார்பற்ற நாடுகளும் ஸ்ரீலங்காவின் நிலைமை பற்றி சபையில் உரையாற்றினார்கள்.

சமரவீரவின் உரை

சமரவீர உரையாற்றுகையில் ஸ்ரீலங்காவில் தற்பொழுது பெரிய அரசியல் கட்சியான ஐக்கியதேசியக் கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்து தேசிய அரசாங்கத்தை உருவாக்கியுள்ளதுடன் தேர்தலில் வெற்றிபெற்ற மூன்றாவது பெரிய கட்சிகளான தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதுடன், ஸ்ரீலங்காவின் 42ஆவது பிரதம நீதியரசராக ஒரு தமிழர் நியமிக்கப்பட்டள்ளது. புதிய அரசு இன மத பேதம் இன்றிய கொள்கைகளைக் கடைப்பிடிக்கவுள்ளதைக் காட்டுவதாகக் கூறினார்.

இவர் மேலும் உரையாற்றுகையில் தமது அரசு நீதி விசாரணைக்கும் அரசியல் தீர்விற்கும் முக்கியத்துவம் கொடுக்கவுள்ளதாகவும்;; கடந்தகால விசாரணை அறிக்கைகளை வெளியிடவுள்ளதாகவும், அதேவேளை காணாமல் போனோருடைய குடும்பங்களிற்கு இதற்கான சான்றிதழ்களைக் கொடுப்பதற்கு ஆரம்பித்துள்ளதாகவும், இராணுவம் வர்த்தகத்தில் ஈடுபடுவதை நிறுத்த நடவடிக்கை எடுக்கப் போவதாகவும், பயங்கரவாதத் சட்டத்தைமீள் பரிசீலனை செய்து அதற்குப் பதிலாகப் பயங்கரவாதத்திற்கு எதிரான சட்டங்களை சர்வதேச சட்டங்களுடன் இணைத்து செயற்படுத்தவுள்ளதாகவும் கூறினார்.

அத்துடன் முன்னையஅரசாங்கம் புலம்பெயர் வாழ் மக்களின் 16 அமைப்புக்களையும் 424 தனிப் பட்டநபர்களையும் தடைசெய்துள்ளபட்டியலைமீள் பரிசீலனை செய்யும ;வேலை முடிவடைவதாகவும் தான் ஒரு நல்லாட்சியுள்ள ஜனநாயக அரசாகத் திகழப்போவதாகவும் சபையில் கூறினார்.

உண்மை:

ஐ.நா. மனிதஉரிமைச்சபையில் உலகத்தின் ‘மோட்சமாக’ ஸ்ரீலங்காமாறவுள்ளதாக கூறியசமரசிங்ககீழ்க்கண்டவிடயங்களையும் அங்கு கூறத்தவறவில்லை.

இவர் தனதுஉரையில் கடந்தகாலங்களில் நல்ல பழக்க வழக்கங்கள் ஒழுங்குகளுக்கும் இதே இடத்தில் நேர்மையான திறமையான சேவகர்களாக ஸ்ரீலங்காவின் இராணுவம் திகழ்ந்ததாகவும் இப்படியாகத ;திழ்ந்த பெரும்பான்மை இராணுவத்தினருக்கு மேல் மட்டத்தில் இருந்த ஒருசில அதிகாரிகளினால் வீணான இழுக்கான பெயர்களைச் சம்பாதித்துள்ளதாகவும் கூறினார்;.

இதே இடத்தில் இவரின்உரையில் தமிழர் கூட்டமைப்பு பற்றி கூறியது தவிர்ந்த வேறு எந்தப் பகுதியிலும் தமிழர் என்ற சொற்பதம் பாவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இவரின் உரைக்கும் போர் முடிந்த பின்னர் மஹிந்த ராஜபக்ஷ ஆற்றியஉரைக்குமிடையில் யாரும் பெரிய வித்தியாசங்களைக் காணமுடியாது. ராஜபக்ஷ இந்த நாட்டில் இனிமேல் சிறுபான்மை என்ற கதைக்கு இடமில்லைஎன்று கூறியிருந்தார்.

ஐ.நாஅறிக்கை

ஐ.நர் மனித உரிமை ஆணையாளரின் காரியாலத்தினால் வெளியிடப்பட்ட விசாரணைஅறிக்கை ஆணையாளர் கூறியதுபோல் கடந்த 16 ஆந் திகதி வெளியாகியிருந்தது.

இவ்வறிக்கையின் குறியீட்டு இலக்கம் யுஃர்சுஊஃ30ஃஊசுP.2 என்பதுகுறிப்பிடத்தக்கது.இவ்வறி;க்கை 261 பக்கங்கள் கொண்ட அதேவேளை 1281 முக்கிய பத்திகளையும ;மூன்று முக்கிய அத்தியாயங்களையும் கொண்டுள்ளது.

முதலாவது அத்தியாயத்தில் முன் அரை: இவ் விசாரணை பற்றிய ஆரம்பம், காரணங்கள் ஸ்ரீலங்கா அரசு தமிழீழ விடுதலைப் புலிகள் பற்றிய ஓரு கண்ணோட்டம், அத்துடன் மற்றைய குழுக்கள் பற்றியும் சட்ட நுணுக்கங்களும ;குறிப்பிடப்பட்டுளது.

இரண்டாவதுஅத்தியாயத்தில் கொலை, காணாமல் போதல், சித்திரவதை, பாலியல் வன்முறை,ஆட்கடத்தல்,சிறுபிள்ளைகளை இராணுவத்தில்இணைத்தல், இடப்பெயர்வு அத்துடன் மக்களுக்கு நிராகரிக்கப்பட்ட உணவு, நீர், மருத்துவம் போன்ற நிவாரண பொருட்கள் மறுக்கப்பட்டுள்ளமை பற்றியும் இடம் பெயர்ந்தோர் அனுபவித்த கஷ்ங்கள் போன்று பல விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. மூன்றாவது அத்தியாயத்தில் இவ் விசாரணையின் போது கண்ட பரிகாரம் சட்ட நடவடிக்கைகள் பரிந்துரைகள் போன்றவை உள்ளடக்கப்பட்டுள்ளன. இங்கு கூறப்பட்டுள்ள பரிந்துரைகளை ஆறு பிரிவுகளாக உள்ளடக்கப்பட்டுள்ளது. பொதுவானவை: நிறுவனநடைமுறைகள் அல்லது மாற்றங்கள் நீதி, உண்மை,உரிமை நஷ்டஈடுகள் ஆகியவற்றுடன் ஆறாவதாக ஐநா அங்கத்துவ நாடுகளிற்கு பல முக்கிய பரிந்துரைகள் செய்யப்பட்டுள்ளன. இவற்றுள் நாடுகளிற்கானபரிந்துரைகள் மிகவும் முக்கியமானவையாகக் காணப்படுகின்றது. எம்மைப்பபொறுத்தவரையில் இவ்வறிக்கைதமிழ் மக்களின்ஆயதப்போராட்டகாலத்தின் முக்கிய ஐ.ந. அங்கீகாரம் கொண்ட ஓர் ஆவணமாககாணப்படுகின்றது.

இவ்வறிக்கை பாதிப்புக்குள்ளாக்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்களை திருப்திப்படுத்தும் என்பதில ;ஐயமில்லை.

இவ்வறிக்கையை ஒழுங்காக வாசித்து புரிந்துகொள்ளாதவர்கள் இவ்வறிக்கையின் கனதியை அதாவது உண்மைத்தன்மையை அறிந்து கொள்ளமாட்டார்கள் என்தை நாம் அறிவோம்.

இவ்வறிக்கை தமிழ் மக்களுக்கு நடைபெற்றவை யாவும் ஓர் இன அழிப்ப என்பதைக் கூறாமல் கூறுகின்றது.

இவ்வறிக்கை நிச்சயம ;காலப்போக்கில் ஓரு சர்வதேச விசாரணைக்கு வழிவகுக்கும் என்பதில் எந்தவித ஐயமுமில்லை.

ஆணையாளர் ஸ்ரீலங்காவிஜயம்

கடந்த வியாழக்கிழமை ஐ.நாஆணையார் காரியாலயத்தில் சிவில் கழகத்திற்காக கூட்டப்பட்ட கூட்டத்தில் பல கேள்விகளுக்கு பதில் கூறிய ஐ.நா. உத்தியோகத்தர் கூடியவிரைவில் ஐ.நா. மனிதஉரிமை ஆணையாளர் குசேயின் அவர்கள் ஸ்ரீலங்காவிற்கு விஜயம் செய்ய எண்ணியுள்ளதாகக் கூறியதுடன் எதிர்வரும் டிசம்பர் மாதம் ஐ.நாவின் காணாமல் போனோருக்கான குழு ஸ்ரீலங்காவிற்கு செல்லவுள்ளதாகவும் கூறினார்.

ச.வி.கிருபாகரன்
ஐ.நா. ஜெனீவாவிலிருந்து

ூூூூூூூூூூூூூூூூூூூூூூூூூூூூூூூூூூூூூூூூூூூூூூூூூூூூூூூூூூூூூூூூூூூூூூூூூூூூூூூூூூூூூூூூூூூூூூூூூூூூூூூூூூூூூூூூூூூூூூூூூூூூூூூூூூூூூூூூூூூூூூூூூூூூூூூூூூூூ

தடம் புரளும் ஐ. நா
வி. தேவராஜா
தமிழ் தந்தி, கொழம்பு, 20-09-2015 – ஐ.நாமனிதஉரிமைப்பேரவையின் அறிக்கைசிங்கள இராஜதந்திரத்திற்குக் கிடைத்தபெரும் அடி. தமிழ் மக்களுக்குவிமோசனம் பிறந்துவிட்டதுஎன்பதுதான் தமிழ் மக்கள் சார்ந்தகருத்தாக இருக்கின்றது.

ஐ.நாமனிதஉரிமைப் பேரவைபரிந்துரைத்துள்ளகலப்புசிறப்புநீதிமன்றப் பொறிமுறைநடைமுறைக்குவருமா? அவ்வாறுவந்தால் தமிழர்களின் நகர்வுஎவ்வாறு இருக்கவேண்டும். அதனைஎவ்வாறுஎதிர்கொள்வதுஎன்பதுபற்றிதமிழர்கள் தரப்புசிந்திப்பதாகத்தெரியவில்லை.

கலப்புசிறப்புநீதிமன்றப்பொறிமுறைக்கப்பால் உள்ளகவிசாரணைநோக்கிஐ.நா. மனிதஉரிமைப் பேரவையை இலங்கைநகர்த்துமாக இருந்தால் தமிழ் மக்ககள் அதற்குஎவ்வாறுமுகங்கொடுப்பதுஎன்பதுகுறித்துச் சித்தித்ததாகவேண்டும். ஏனெனில் சிங்களஇராஜ தந்திரம் மிகவேகமாகஉள்நாட்டிலும் சர்வதேசரீதியிலும் காய்களைநகர்த்தத் தொடங்கிவிட்டது.

ஐ.நாமனிதஉரிமைப்பேரவையின்அறிக்கை இலங்கையைசற்றுத் தடுமாறவைத்;து என்பதுஉண்மைதான் அந்தத்தடுமாற்றம். சிங்கள இராஜதந்திரத்தைதடுத்துநிறுத்திவிடவில்லை. தூரநோக்குடன் செயற்பட்டுதனதுநலனைமுன்னிலைப்படுத்திக் காய்களைநகர்த்துவதற்குஅதனைத் தூண்டியுள்ளது.

அந்தவகையில் இலங்கையின் இன்றையதேசியஅரசாங்கம் தனதுஒவ்வொருஅடியினையும்மிகநிதானமாகவேஎடுத்துவைக்கின்றது. குறிப்பாகசர்வதேசவலைப்பின்னலில் இருந்துஎவ்வாறுதன்னைப் பாதுகாத்துக்கொள்வதுஎனப்பதுதான் அதன் முன்னுள்ளபிரச்சினை. சர்வதேசவலைப்பின்னனில் இருந்துவிடுபடுவதற்கானவேலைத்திட்டங்கள் பொதுத் தேர்தலுக்குமுற்பட்ட நூறு நாட்கள் வேலைத்திட்டத்தில் முன்;னுரிமைகொடுக்கப்பட்டுசெயற்படுத்தப்பட்டன. அதில் குறிப்பிடத்தக்கவெற்றியும் பெற்றனர். அச்செய்தியை ஜனாதிபதிமைத்திரிபாலசிரிசேன இவ்வாறேநாட்டுமக்களுக்குஅறிவித்தார்.

அதாவது இலங்கைகுறித்து இரண்டுபட்டுக் கிடந்தசர்வதேசத்தை இலங்கைநோக்கிஒன்றுபடுத்தினோம் என்பதுதான் அந்தவெற்றிச் செய்தியாகும்.

இந்தநகர்வுஅத்துடன்முற்றுப் பெறவில்லை. அமெரிக்காவின் நிலைப்பாட்டில்திடீர்த்திருப்பத்தைஏற்படுத்தவைத்துள்ளனர் இலங்கையின் ஆட்சியாளர்கள். அதாவதுசர்வதேசவிசாரணைஎன்றநிலைப்பாட்டில் இருந்துஉள்ளகவிசாரணைநோக்கிநகர்த்தியுள்ளனர்.

ஏற்கனவேநீதியரசர்பதவிவழங்கப்பட்டுவிட்டது. தற்போதுஎதிர்க்கட்சிப்பதவியும்வழங்கப்பட்டுள்ளது. அதாவது 54 பொதுஜன ஐக்கியமுன்னணிஉறுப்பினர்கள் கையொப்பம் இட்டு ஜனாதிபதியிடம் கையளித்தபின்பும் 16 இடங்களைப் பெற்ற கூட்டமைப்புக்கேஎதிர்க்கட்சித்தலைவர் பதவிவழங்கப்பட்டதன் பின்னணியை இன்றுதமிழ் மக்கள் வெளிவிவகாரஅமைச்சர்மங்களசமரவீரவின் ஐ.நா. மனிதஉரிமைபேரணியில் ஆற்றியஉரையில் இருந்துவிளங்கிக்கொள்ளலாம். சிங்களத் தலைமைகள்தமதுகுறிக்கோளைநிறைவேற்றிக்கொள்வதற்குதமிழ் முக்கியஸ்தர்களையும் அரசியல் தலைவர்களையும் எவ்வளவு இலாவகமாக இடம் மாற்றிதமதுகாரியத்தைச் சாதித்துக் கொள்கின்றனஎன்பதுஒன்றும் புதிதல்ல.

1947 இல் டட்லிசேனநாயக்கசுதந்திரத்தைகையகப்படுத்திக் கொள்வதற்காகஅமைச்சர் பரிவாரங்களுடன் வடக்குக்குப் படையெடுத்தார். பிறகுதமிழரைக்கொண்டேசுதந்திரத்தைஉறுதிசெய்துகொண்டார். பிரேமதாஸா ஐந்துலிங்கங்கள் பற்றிப்பேசினார்.ஜே. ஆர் ஜெயவர்த்தனாபிரதமநீதியராசராகசர்வானந்தாவையும் பொலிஸ்மாஅதிபராக இராஜசிங்கம் அவர்களையும்,சட்டமாஅதிபராகபசுபதிஅவர்களையும் நியமித்துள்ளதாககுறிப்பிட்டதுடன் முக்கியபதவிகளில் தமிழர்கள் அமர்த்தப்பட்டுள்ளதால் தமிழர்களுக்குஎன்னகுறைஎன்றுகேட்டார்.

மஹிந்த ராஜபக்ஷ தமிழ் அரசியல் வாதிகளில் ஒருபகுதியினரைத்தன்னுடன் வைத்துக்கொண்டுதமிழர்கள்அனைவரும் தம்பக்கம் என்றார். இன்றுதமிழ்த்தேசியம்பேசும் பெரும்பாலானவர்கள் அரசுடன் உறவாடிக்கொண்டு இருக்கின்றனர். இந்தஉறவுதமிழ் மக்களுக்குத்தெரியாதுஎன்றுநினைக்கலாம். ஆனால் அதுபரமரகசியமல்லஎன்பதுஅனைவருக்கும் தெரியும்.

இன்றும் அதேநிலையேதொடர்வதாகஉணரமுடிகின்றது. வெளிவிவகாரஅமைச்சர் மங்களசமரவீரவின் ஐ. நா உரையும் அதனைஅடியொற்றியதாகஅமைந்துள்ளது. அந்தவகையில் இலங்கையின் ஆட்சியாளர்கள் கடந்தகாலங்களைப் போன்றுதமிழ்த் தலைமைத்துவங்களின் விரல்களால் தமிழ் மக்களின் கண்களைக் குத்திவிடும் நகர்வைமேற்கொள்வதாகவேஉள்ளது.

ஏனெனில் இலங்கைஅரசாங்கம் சார்வதேசரீதியில் ஓரு பெரும்நெருக்கடிக்குமுகம்கொடுத்துக்கொண்டிருக்கின்ற இன்றையநிலையில்கூட ‘தகர்ந்துபோகும் வாக்குறுதி’களுடனேயேசர்வதேசஅரங்கில்நிற்கின்றது.

இனவிவகாரத் தீர்வுக்கானஎவ்விதநகர்வையும் மேற்கொள்ளாதுஅரசியல் அமைப்புசீர்திருத்தம் கொண்டுவரும் போதுபிரச்சினைகளுக்குத் தீர்வுகிட்டும் என்றுசிங்களத் தலைவர்கள் வழமையானபாணியில் தகர்ந்துபோகும்’வாக்குறுதிகளைவழங்கிநி;ற்கின்றது.

மொத்தத்தில் தமிழர் தரப்பின் செயற்பாடுகள் இலங்கைஅரசைசர்வதேசஅரங்கில் இருந்துபிணைஎடுக்கஉதவுமேதவிரஅரசயில்ரீதியில் தமிழ் மக்களுக்குவிடிவோவிமோசனமோஏற்படும் என்றுநம்புவதற்கில்லை. ஆனால் தேசியஅரசாங்கத்தின் நல்லாட்சிபற்றியும் ஐ.நா. அறிக்கைகுறித்தும் தமிழ்த்தலைமைகள் சிலர் சிலாகித்துப் பேசுகின்றனர்.

கடந்த 17 ஆந்திகதிதினமணிதீட்டியஆசிரியர் தலையங்கம் யதார்த்தத்தைப் பேசுகின்றது.பொதுவாகவே இந்தியஊடகங்கள் அனைத்தும் ஐ. நா மனிதஉரிமைப்பேரவையின் தீர்மானம் இலங்கைக்குக் கிடைத்தபெரும் வெற்றிஎன்றே கூறுகின்றன. இது ஒருவகையில் இந்தியாவுக்குக் கிடைத்தபெருவெற்றியாகவேகருதவேண்டியுள்ளது. இந்தவெற்றியைமுழுமையானவெற்றியாக்கும் வகையில் சிங்கள் இராஜதந்திரிகள் ஜெனீவாவில் நகர்வுகளைமேற்கொள்வதாகவேஅங்கிருந்துகிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

கலப்புசிறப்புநீதிமன்றத்துக்குப் பதிலாகஉள்நாட்டுநீதிபதிகளைக் கொண்டஉள்ளகவிசாரணைகுறித்ததனதுஎண்ணத்தை ஐ. நா பேரவையில் திணித்துவிட இலங்கைகடும் பிரயத்தனத்தைமேற்கொண்டுவருகின்றது. இதில் இலங்கைவெற்றிபெறும் என்பதில் எவ்விதகருத்துவேறுபாடுகளுக்கும் இடமில்லை. இந்தவெற்றியை இலகுவாக்கிக் கொள்ளஅமெரிக்காவின் உதவியை இலங்கைநாடியுள்ளதாகவும் அமெரி;க்காவுக்குகடும் அழுத்தத்தினைப் பிரயோகித்துவருவதாகவும் அறியமுடிகின்றது. இதற்கு இந்தியா முழு ஆதரவை இலங்கைக்குவழங்கிவருவதாகவும் இறுதியில் உள்ளகவிசாரணையைவலியுறுத்தும் பிரேரணைஐ.நாமனிதஉரிமைப் பேரவையில் கொண்டுவரப்படுவதற்கானசாத்தியக் கூறுகளே கூடுதலாக இருப்பதாகவும் ஜெனீவாத் தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன.

ஜனாதிபதிமைத்திரிபாலசிறிசேனாவோஅல்லதுபிரதமர் ரணில் விக்கிரமசிங்கவோகலப்புசிறப்புநீதிமன்றம் குறித்துவெளிப்படையாககருத்துக்கள் முன்வைக்காவிட்டாலும் அரசாங்கத்தின் சார்பில் வெளிவிவகாரஅமைச்சரையும் அமைச்சர் இராஜிதசேனாரத்னபோன்றவர்களை இதற்குஎதிராகப் பேசவைத்துள்ளனர்.

தனக்குகலப்புசிறப்புநீதிமன்றம் குறித்துஏதும் தெரியாதுஎன்றுகுறிப்பிடும் பிரதமர் முன்னாள் ஜனாதிபதிமஹிந்த ராஜபக்ஷ ஐ.நாபொதுச் செயலாளர் பான் கி மூனுக்குஉள்ளகவிசாரணைகுறித்துவழங்கியஉறுதிமொழியைபகிரங்கப்படுத்தியுள்ளார். மறுபுறம் வெளிநாட்டுஅமைச்சர் மங்களசமரவீர இறுதிக்கட்டப் போரின்போது இடம்பெற்றபோர்க்குற்றங்கள் உட்படமனிதகுலத்துக்குஎதிரானகொடூரங்கள் தொடர்பானவிசாரணைக்குவெளிநாட்டுத் தலையீடுகள் தேவையில்லைஎன்றுகுறிப்பிட்டுள்ளார். அத்துடன் எதிர்வரும் ஜனவரிமாதம் உள்ளகவிசாரணைப் பொறிமுறைஅமைக்கப்படும் என்றும் 18 மாதங்களுக்குள் குறித்தவிசாரணைமுடிவுக்குக் கொண்டுவரதீர்மானித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

கலப்புச் சிறப்புநீதிமன்றப் பொறிமுறைகுறித்துஐ.நாமனிதஉரிமைப்பேரவைஅடுத்தகட்டநகர்வுக்குப் போகும் முன்பே இலங்கைஉள்ளகவிசாரணைநோக்கிகாய்களைநகர்த்தத் தொடங்கிவிட்டதுஎன்பதைத்தான் மேற்கூறப்பட்டசம்பவங்கள் உணர்த்திநிற்கின்றன. இலங்கையின் இந்தநகர்வுக்கு இந்தியாவும் அமெரிக்காவும் பச்சைக் கொடிகாட்டடியதாகவேகருதமுடிகின்றது. எதுஎப்படியிருப்பினும் கலப்புச் சிறப்புநீதிமன்றம் நடைமுறைக்குவருவதுசாத்தியமற்றதுஎன்பதையேநடைபெறும் நிகழ்வுகள் கோடிட்டுக் காட்டுகின்றன.

ஒன்றில் முற்றுமுழுதானஉள்ளகவிசாரணைஅல்லது ஐ. நா மனிதஉரிமைப் பேரவையிடம் ஆலோசனைவழிகாட்டல்,தொழில்நுட்பஉதவி இவைகளுடனானஉள்ளகவிசாரணைஎன்பதேதற்போதுள்ளதெரிவுகளாகஉள்ளன.

ஐ.நாமனிதஉரிமைப் பேரவையில் ஏற்படப்போகின்ற இந்தசடுதியானமாற்றத்தினைத் தமிழ்த் தரப்புஎவ்வாறுமுகங்கொடுக்கப்போகின்றது, இதற்கானசர்வதேசரீதியிலானநகர்வுகள் என்னஎன்பதுமே இன்றையகேள்வியாகஉள்ளது. ழூ
சர்வதேசநெருக்கடியிலிருந்து இலங்கையைப் பிணைஎடுப்பதற்கு இந்தியாவும் அமெரிக்காவும் தயாராகிவிட்டன. இந்தஒருபின்னணியில் தமிழர் தரப்பு இனவிவகாரத் தீர்வில் இலங்கைஅரசாங்கத்தைஎந்தளவிற்குவழிக்குக் கொண்டுவருவதற்கானநகர்வுகளைமேற்கொள்ளப்போகின்றனஎன்பதேதமிழ் மக்களின் கேள்வியாகவும் எதிர்பார்பாகவும் உள்ளது.

மொத்தத்தில் ஐ. நா மனிதஉரிமைப்பேரவைதமிழ் மக்களுக்குவழங்கப்போவதுபெரும் ஏமாற்றமேஎன்பதைத் தவிரவேறுஒன்றும் கூறுவதற்கி;ல்லை.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*