இரட்டைச் சகோதரிகள் பெற்றெடுக்கப் போகும் இரண்டாவது செட் இரட்டை குழந்தைகள்

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

twin

இரட்டைக் குழந்தைகள் பிறப்பதற்கு காரணமாக மருத்துவ அறிவியல் ஆயிரம் விளக்கங்களை தருகிறது. கேட்கவே சிலிர்ப்பாக இருக்கும் இந்த உண்மைகளைத் தாண்டி பதிலே இல்லாத கேள்வியாக பல்வேறு ஆச்சர்யமூட்டும் சம்பவங்களும் அவ்வப்போது நடந்துவருகின்றன.

அமெரிக்காவின் உட்டா மாநிலத்தில் ஆசிரியைகளாக ஒரே பள்ளியில் பணிபுரியும் இரட்டை சகோதரிகள், அவர்களது வாழ்வு முழுதும், நட்புடன் வளர்ந்து வந்தனர். ஒற்றுமையுடனே இருக்கும் இவர்கள் தங்களுக்கு நெருங்கிய நண்பர்களாக இருந்த இருவரை திருமணம் செய்துகொண்டனர்.

கெர்ரி மற்றும் கெல்லி என்கிற இந்தச் சகோதரிகளில் ஒருவருக்கு நான்கு வயதில் இரட்டைப் பெண் குழந்தைகளும், மற்றொருவருக்கு மூன்று வயதில் ஒரு ஆண், பெண் என இரட்டை குழந்தைகளும் உள்ளனர்.

தற்போது, இந்த இரு சகோதரிகளும், இரண்டாவது முறையாக ஒரே நேரத்தில் கர்ப்பம் அடைந்துள்ளனர். மருத்துவ பரிசோதனையில் இருவருக்குமே மீண்டும் இரட்டைக் குழந்தைகள் கருத்தரித்துள்ளதாக தெரியவந்துள்ளது. வரும் மார்ச் மாதம் பிரசவத்தை எதிர்ப்பார்த்துள்ள இந்த சகோதரிகள் இருவரும் பெருமகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit