சுவிசில் கி.பி. அரவிந்தன் – ஒரு கனவின் மீதி நூல் அறிமுக நிகழ்வு!

பிறப்பு : - இறப்பு :

ஈழப் போராட்ட முன்னோடி, கவிஞர், ஊடகவியலாளர் கி.பி. அரவிந்தன் அவர்களின் மறைவை ஒட்டி அவரது நண்பர்கள், தோழர்களால் எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு நூலான கி.பி. அரவிந்தன் – ஒரு கனவின் மீதி அறிமுக நிகழ்வு எதிர்வரும் சனிக்கிழமை (19.09.2015) மாலை 6 மணிக்கு சுவிற்சர்லாந்து நாட்டின் தலைநகர் பேர்ணில் அமைந்துள்ள ஞானலிங்கேச்வரர் ஆலய மண்டபத்தில் நடைபெறும்.

ஊடகவியலாளர் சண் தவராஜா தலைமையில் நடைபெறும் நிகழ்வில் நூலின் தொகுப்பாசிரியர்களுள் ஒருவரும் முற்போக்குக் கவிஞருமான தோழர் பா. செயப்பிரகாசம் சிறப்புரை வழங்குவார். நூல் அறிமுகவுரையினை இலக்கியவாதி நயினை சிறி அவர்களும், கி.பி. அரவிந்தனின் அரசியல் சிந்தனைகள் தொடர்பில் அரங்கச் செயற்பாட்டாளர் திருமதி சிவாஜினி தேவராஜா அவர்களும் உரையாற்றுவர். நிகழ்வில் தோழர் பா. செயப்பிரகாசம் அவர்களுடனான கலந்துரையாடலும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit