நரபலி புகார் தொடர்பாக தனிப்படை அமைத்து விசாரணை நடத்தப்படும்: போலீஸ் சூப்பிரண்டு அறிவிப்பு

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

narapali

மேலூர் அருகே உள்ள மணிமுத்தாறு ஒடை சுடுகாட்டு பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்ட 2 பேர் கிரானைட் குவாரிகளுக்காக நரபலி கொடுக்கப்பட்டு புதைக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.இதன் அடிப்படையில் அங்கு உடல்களை தோண்டி எடுக்க சகாயம் குழுவினர் சென்றனர்.

அவர்களுடன் கோட்டாட்சியர் செந்தில் குமாரி, மேலூர் வட்டாட்சியர் கிருஷ்ணன், காவல் கூடுதல் கண்காணிப்பாளர் மாரியப்பன், மேலூர் துணை கண்காணிப்பாளர் மங்களேஸ்வரன் ஆகியோரும் சென்றிருந்தனர்.

மாலை நேரத்தில் மழை பெய்ய தொடங்கியதாலும், இருள் சூழ்ந்ததாலும் தோண்டும் பணி நிறுத்தப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சகாயம் மற்றும் அவரது குழுவினர் சுடுகாட்டிலேயே அமர்ந்தனர்.

இதுகுறித்து தகவல் கிடைத்ததும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயேந்திர பிதாரி, சம்பவ இடம் வந்து உடல்கள் புதைக்கப்பட்டதாக கூறப்படும் இடத்தை பார்வையிட்டார். பின்னர் சகாயத்திடமும் அவர் பேசினார். தொடர்ந்து நிருபர்களிடம் கூறியதாவது:–

நரபலி கொடுக்கப்பட்ட விவகாரம் தொடர்பான புகார் குறித்து எங்களுக்கு பிற்பகலில்தான் தெரிய வந்தது. கொலை செய்யப்பட்டவர்கள் யார்? எப்போது கொலை செய்யப்பட்டார்? போன்ற விவரங்கள் புகாரில் தெளிவாக இல்லை. நீண்ட நாட்களுக்கு முன்பு கொன்று புதைக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளதால் மருத்துவ குழு முன்னிலையில்தான் உடல்களை தோண்டி ஆய்வு செய்ய வேண்டும். நாளை (இன்று) காலை மருத்துவ குழு முன்னிலையில் தோண்டும் பணி தொடரும். மேலும் புகார் குறித்து விசாரணை நடத்த தனிப்படை அமைக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கிடையில் போதிய பாதுகாப்பு இல்லை என சகாயம் கூறியதை தொடர்ந்து அங்கு கூடுதல் போலீசாரை பாதுகாப்புக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயேந்திர பிதாரி நியமித்து உத்தரவிட்டார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit