வெளிநாட்டு மதுவை விற்கும் திமுக முன்னாள் அமைச்சர் நிறுவனம்: அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–

தமிழ் நாட்டில் டென்மார்க் தயாரிப்பான கார்ல்ஸ்பெர்க் என்ற புதிய பீர் வகையை அறிமுகம் செய்ய முடிவு செய்துள்ளனர்.

தமிழ்நாட்டில் இலக்கு நிர்ணயித்து மது விற்பனை செய்து வரும் தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனம் விற்பனையை அதிகரிக்கும் நோக்கத்துடன் இந்த முடிவை எடுத்திருப்பதாகக் கூறப்படுகிறது.

டென்மார்க் நாட்டைச் சேர்ந்த கார்ல்ஸ்பெர்க் நிறுவனம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இந்தியாவில் கால்பதித்து பீர் உற்பத்தியைத் தொடங்கியது. எனினும் தமிழகத்தில் இந்த பீர் வகை அனுமதிக்கப்படவில்லை. இத்தகைய சூழலில் கார்ல்ஸ்பெர்க் பீர் வகையை அதிகாரப்பூர்வமாக விற்பனை செய்ய தமிழக அரசு முடிவு செய்திருக்கிறது.

இதற்கான ஒப்பந்தம் சென்னையில் நேற்று கையெழுத்தாகியிருக்கிறது. முதலில் வெளிநாடுகளில் இருந்தும், பின்னர் வெளிமாநிலங்களில் இறக்குமதி செய்யப்பட்ட இந்த வகை பீர் இப்போது தமிழகத்திலேயே உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த சேவையை செய்து தருவது தி.மு.க.வைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ஒருவருக்கான சொந்தமான பீர் ஆலை தான். அதனிடமிருந்து முதல்கட்டமாக ஒரு லட்சம் பெட்டிகள் கார்ல்ஸ்பெர்க் பீர் வாங்க ஆணையிடப்பட்டிருப்பதாகவும் டாஸ்மாக் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

மது விற்பனையை பெருக்க வேண்டும் என்பதையே நோக்கமாக கொண்டிருப்பது மிகக் கொடிய குற்றமாகும்.

அதுமட்டுமின்றி, தமிழ் நாட்டில் விற்பனை செய்யப்படும் மதுவகைகளில் பாதி தி.மு.க.வினருக்கு சொந்தமான மது ஆலைகளில் இருந்து உற்பத்தி செய்யப்படுகிறது என்று தொடர்ந்து நான் குற்றஞ்சாற்றி வருகிறேன். மது குடிப்பதால் தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் 2 லட்சம் பேர் உயிரிழப்பதாகவும், இவர்களில் ஒரு லட்சம் பேர் தி.மு.க.வினர் உற்பத்தி செய்யும் மதுவைக் குடிப்பதால் உயிரிழப்பவர்கள் என்றும் கூறிவருகிறேன்.

டாஸ்மாக் நிறுவனத்திற்கு வெளிநாட்டு பீர் வகைகளை தயாரித்து வழங்க தி.மு.க.வைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சரின் மது ஆலை முன்வந்திருப்பது கண்டிக்கத் தக்கது. ‘‘எத்தனை லட்சம் மக்கள் உயிரிழந்தாலும் பரவாயில்லை… மதுவை விற்று வருவாய் ஈட்ட வேண்டும்’’ என்பது தான் தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய இரு கட்சிகளின் பொதுவான கொள்கையாக உள்ளன. மதுவைக் கொடுத்து மக்களை அழிப்பதில் கூட்டணி அமைத்து செயல்படும் தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய இரு கட்சிகளையும் மக்கள் விரட்டியடிப்பது உறுதி.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*