அஸ்திகரைக்கும் இடமாக மாறிவரும் வவுனியா வைரவபபுளியங்குளம்

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

வவுனியாவின் நீர் ஆதாரங்களில் முக்கிய இடம் பிடிக்கும் குளங்களில் வைரவபுளியங் குளமும் முக்கிய இடம் பிடிக்கின்றது.
தற்போது இக்குளம் பொதுமக்களால் குப்பைபோடும் இடமாகவும், அஷ்திகரைக்கும் இடமாகவும், விலங்குகளின் கழிவுகளைகொட்டும் இடமாகவும் பயன்படுத்துகின்றனர். இவ்வாறு குப்பைகளை போடுவதன் மூலமாக பல அபாயகரமான நோய்களை உருவாக்கும் நுண்ணுயிர்களை தோற்றுவிக்க உதவுவதுடன்; பெரும் சுகாதார சீர்கேடை உருவாக்கியுள்ளது. மக்களின் இவ்வாறான அசமந்த போக்கினால் நாளடைவில் இக் குளம் இருந்தசுவடே இல்லாமல் போவதுடன் பலர் இதனால் ஏற்;படும் நோய்த் தொற்றுக்கு உள்ளாகி மரணமடைய கூடியசந்தர்ப்பங்களும் ஏற்படும்.

இது தொடர்பாக சுகாதார திணைக்களமும், கிராம மட்ட குழுக்களும் எமக்கு தந்த தகவலின் அடிப்படையில். இவ்வாறு செய்யும் நபர்களை பிடித்து சட்டத்தின் முன் நிறுத்தி கடுமையான தண்டனைகளை பெற்றுக்கொடுக்க உள்ளதாக கூறியதோடு இவ்வாறு செய்த சிலநபர்களை கையும் களவுமாகவும் தம்மால் பெயர் முகவரியுடன் பிடிக்கப்பட்டுள்னர் இவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறியதுடன் பொதுமக்கள் தொடர்பாக விழிப்பாக செயற்படுமாறும்.

இது தொடர்பான குற்றச்செயல்களில்; ஈடுபடுவர்களை பற்றி தகவல் தெரிந்தால் சுகாதார திணைக்களத்துக்கு அல்லது கிராமமட்ட குழுக்களுக்கு அறியத்தருமாறு கூறினார். அத்துடன் இக்குளத்தைபோல் பல குளங்களில் இவ்வாறான செயற்பாடுகளை பலர் முன்னெடுத்துச் செல்வது பற்றி எமக்கு தகவல் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் கூறினார்கள்.

பொதுச் சொத்து எங்கள் சொத்து என்ற பழமொழியை தவறாக பயன்படுத்தி இவ்வாறான காரியத்தில் ஈடுபடுவர்களை கடுமையான தண்டனைக்குரிய குற்றமே நீரே எமது ஆதாரம் இதற்கு நாமே ஆதாரம்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*