புனித மக்கா ஹரம் ஷரீபில் இடம்பெற்ற திடீர் விபத்துச் செய்தி எனக்கு ஆழ்ந்த துக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக சட்டத்தரணி ஹுனைஸ் பாறூக் எம்.பி. அனுதாபம்

பிறப்பு : - இறப்பு :

நேற்று 2015.09.11ம் திகதி மாலை புனித மக்கா ஹரம் ஷரீபில் இடம் பெற்ற திடீர் விபத்துச் சம்பவத்தினால் பல உயிர்கள் காவுகொள்ளப் பட்டுள்ளன என்ற மரணச் செய்தி எனக்கு ஆழ்ந்த துக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக வன்னி மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி ஹுனைஸ் பாறூக் அனுதாபச் செய்தியை வெளியிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்:-
அன்மைக்காலங்களாக புனித மக்கா ஹரம் ஷரீபில் கட்டுமானப் பணிகள் இடம் பெற்று வருகின்றது, இந்த நிலையில் கட்டுமானப்பணிகளுக்கு பயன் படுத்துவதற்காகவென அங்கு பல கனரக இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வந்தன.

அந்தவகையில் கட்டுமானப்பணிகளுக்கான பல கிரைன் இயந்திரங்கள் நிறுத்திவைக்கப் பட்டிருந்தன. இவ்வாறு வைக்கப்பட்டிருந்த பலகிரைன் இயந்திரங்களில் ஒன்று திடீரென உடைந்து வீழ்ந்ததில் அங்கு குழுமியிருந்தவர்கள் பலர் இந்த அனர்த்தத்தில் சிக்கியுள்ளனர்.

இத்திடீர் அனர்த்தத்தில்; சிக்கி வபாத்தானவர்களின் பாவங்களை அல்லாஹ் மன்னித்து இவர்களின் நற்செயல்களை அங்கீகரிப்பதோடு இவர்களுக்கு ஜன்னதுல் பிர்தௌஸ் எனும் மேலான சுவனத்தை கொடுக்கவேண்டும் என இந்த சந்தர்ப்பத்தில் பிரார்த்தனை செய்து கொள்கின்றேன்.

மேலும் பலர் இந்த அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களும் வெகுவிரைவில் குனமடையவேண்டும் இவர்களுக்கு அல்லாஹ் தேக ஆரோக்கியத்தையும் உற்சாகத்தையும் கொடுக்கவேண்டும் எனவும் இந்த சந்தர்ப்பத்தில் பிரார்த்திக்கின்றேன்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit