சுவிஸ் நாடாளுமன்றத்தில் ஈழத் தமிழர் குரல்?

பிறப்பு : - இறப்பு :

புலம்பெயர் நாட்டின் இரண்டாவது தலைமுறைப் பெண்மணியான திருமதி தர்சிக்கா கிருஸ்ணானந்தம் அக்டோபர் 18 இல் நடைபெறவுள்ள சுவிஸ் நாடாளுமன்றத் தேர்தலில் சோசலிச ஜனநாயகக் கட்சியின் சார்பில் பேர்ண் மாநிலத்தில் போட்டியிடுகிறார்.

பிறப்பு முதல் அரசியல் பின்னணியோடு வாழ்ந்துவரும் அவர், தேர்தலிலே போட்டியிட ஏன் முடிவு செய்தார், சோசலிச ஜனநாயகக் கட்சியை ஏன் தேர்ந்தெடுத்தார், தேர்தல் வெற்றியின் ஊடாக புலம்பெயர் தமிழ் மக்களுக்கு எத்தகைய பணியை ஆற்ற உள்ளார் உள்ளிட்ட பல கேள்விகளுக்கு விடை அளிக்கிறார்.

பேர்ண் மாநிலத்தில் வாழும் சுவிஸ் பிரஜாவுரிமை பெற்ற தமிழ் மக்கள் ஒட்டுமொத்தமாக தனக்கு வாக்களித்தால் தனது குரல் சுவிஸ் நாடாளுமன்றத்தில் புலம்பெயர் தமிழ் மக்களின் குரலாக ஓங்கி ஒலிக்கும் என்கிறார். உலகத் தமிழர்களின் ஒலிநாதம் கதிரவன் உலாவிற்காக அவர் வழங்கிய சிறப்புச் செவ்வி இங்கே நேயர்களுக்காக.

 

Tharshika Krishnan - Kopie
Tharshika Krishnanantham (2) Tharshika Krishnanantham (1) Tharshika Krishnanantham (1)

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit