கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெறும் சாதனையாளர்கள்

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

கின்னஸ் உலக சாதனைகளை பதிவு செய்யும் நிறுவனம் கடந்த 1955–ம் ஆண்டு தொடங்கப்பட்டது. சமீபத்தில் தனது 60–வது ஆண்டை நிறைவு செய்துள்ள இந்நிறுவனம், அடுத்த ஆண்டுக்கான கின்னஸ் புத்தகத்தில் வெளிவர இருக்கும் சாதனையாளர்களைப் பற்றி சில தகவல்களைத் தற்போது வெளியிட்டுள்ளது.

வெனிசுலாவைச் சேர்ந்த ஜெய்சன் ஹெர்னாண்டேஸ்(20) 40.1 செ.மீ. நீளமான பாதம் இருப்பதால் கின்னஸ் புத்தகத்தில் இடம்பெறுகிறார்.

அவருடன், முயலைத் தோற்கடிக்கும் வேகத்தில் நடையிடும் அமெரிக்காவின், கரோலினாவைச் சேர்ந்த பெர்ட்டி ஆமை இந்தப் புத்தகத்தில் இடம்பெறுகிறது. இது ஒரு நொடிக்கு 0.28 மீட்டர்களை கடக்க முடியும். இது 1977-ம் ஆண்டு கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்ற முந்தைய ஆமையின் சாதனையை முறியடித்தது.

அமெரிக்காவின் கலிபோர்னியா நகரில் உள்ள முயல் மிக நீளமாக 36.5 செ.மீட்டர் நீளத்துக்கு வளர்ந்த ரோமத்தால் இந்த புத்தகத்தில் இடம் பெறுகிறது.

இதைப்போல, அமெரிக்காவுன் ஒக்லஹோமா மாநிலத்தில் உள்ள மாடு வளர்ப்பு நிறுவனம் ஒன்றின் மாட்டுக்கு 293.8 செ.மீட்டர் நீளத்தில் கொம்பு உள்ளது. இது தனது போட்டியாளர்களைக் காட்டிலும், அதிகளவு வித்தியாசத்தில் வெற்றி பெற்று, கின்னசில் இடம் பெற்றுள்ளது.

ஜப்பானின் புரின்(9) பீகள் வகை நாய் தன்னுடைய முந்தைய சாதனையை தானே முறியடித்து தனது முன்னங்கையால் ஒரு நிமிடத்தில் 14 முறை பந்துகளைப் பிடித்துள்ளது. இது ஏற்கனவே 11 முறை பந்தைப் பிடித்துள்ளது.

கின்னஸ் சாதனை நிறுவனம் தொடங்கப்பட்டதில் இருந்து இதுவரை 13 கோடியே 40 லட்சம் புத்தகங்கள் விற்பனை ஆகியுள்ளன. இவை உலகம் முழுவதும் 100 நாடுகளில் விற்பனை ஆகிறது. இப்புத்தகம் 21 மொழிகளில் வெளியிடப்பட்டு வருகிறது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*