தோல்வியைத் தழுவிய புலம்பெயர் சமூகமும், சமூக ஊடகங்களும்…….? தொல்காப்பியன்

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

“„…………மிகவேடிக்கை என்னவென்றால் வாக்களிக்கும் தமிழர்கள், வடக்கு கிழக்கில் இருக்க பிரான்சின் லாசப்பலிலும், பிரித்தானியாவின் லண்டனிலும் சுவிஸ்லாந்து நாட்டின் சூரிச் பேர்ண் சுக் லுசேர்ண் மற்றும் வி. புலிகள் சுவிஸ் கிளையின் பேரால் நடாத்தப்பட்ட மாவீரர் உதைபந்தாட்டப் போட்டிமதானங்களிலும் வேட்பாளர்களுக்கு ஆதரவாக சுவரொட்டிகளை ஒட்டும் அளவுக்கு புலம்பெயர் தமிழர்களின் அரசியல் செயற்பாடுகள் சந்தி சிரிக்கும் அளவில் இருந்தன.

தனிநபர்களை குறிவைத்தும், கீழ்த்தரமாக விமர்சித்தும், முன்னெடுக்கப்பட்ட பிரசாரங்கள் அனைத்துமே தோல்வியில் தான் முடிந்தன. புலம்பெயர் ஊடகங்களால் இரா.சம்பந்தனும், சுமந்திரனும் மிகமோசமாக -கேவலமாக விமர்சிக்கப்பட்டனர். அவை மனிதஒழுக்கம், ஊடக நெறிமுறைகளுக்கு அப்பாற்பட்டதாகவும் இருந்தன. இவ்வாறான செயற்பாடுகளில் நாம் மதிக்கத்தக்க வளவாளர்களும் புத்திஜீவிகளும் கல்விமான்களும் ஈடுபட்டிருந்தமையும் துரதிஸ்ரவசமானதே. 2009ற்கு பின்னரான விடுதலைப் புலிகளின் செயற்பாட்டில் முரன்பட்டு நின்றவர்கள் கூட த.தே.கூட்டமைப்புக்கு எதிரான செயற்பாடுகளை முன்னெடுத்த புலிகளின் எச்சங்களோடு கைகோர்த்து செயற்பட்டமை இவர்களின் தற்கிதங்களுக்கு முரனாக அமைந்திருந்தமை வேடிக்கையானதே. இத்தகைய பிரசாரங்கள் அவதூறுக்கு உள்ளாக்கப்படுபவரை விட, அவதூறு செய்பவர்களுக்குத் தான் பாதிப்பை ஏற்படுத்தும்…………..”

கடந்த திங்கட்கிழமை நடந்த நாடாளுமன்றத் தேர்தலில், மீண்டும் அதிகாரத்துக்கு வரும் மகிந்த ராஜபக்சவின் முயற்சி மட்டும் தோற்கடிக்கப்படவில்லை. தமிழ்த் தேசிய அரசியல் அரங்கில் இருந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைத் தோற்கடிப்பதற்காக, மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளும் தான் தோற்டிக்கப்பட்டன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைத் தோற்கடிப்பதற்கான முயற்சியில், மிக முக்கியமான பாத்திரத்தை வகித்த புறக்காரணிகள் இரண்டு.

ஒன்று புலம்பெயர் தமிழர்கள்.

இரண்டாவது சமூக ஊடகங்கள், மற்றும் புலம்பெயர் தமிழ் ஊடகங்களின் ஒரு பகுதி.

இந்த தேர்தலில், இந்த இரண்டு காரணிகளுமே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிரான பிரசாரங்களுக்கு வலுவாகப் பயன்படுத்தப்பட்டிருந்தன.

அரபுலகப் புரட்சியின் போது, சமூக ஊடகங்கள் கணிசமான செல்வாக்கைச் செலுத்தியிருந்தன. துனீசியா, எகிப்து, லிபியா போன்ற நாடுகளில் நிலவிய சர்வாதிகார ஆட்சிகளை அகற்றுவதில் சமூக ஊடகங்களும் இணையங்களும் மேற்குலக நாடுகளால் மிகநுட்பமாகத் திட்டமிட்டு பயன்படுத்தப்பட்டன. அதற்குப் பின்னர், எல்லா நாடுகளுமே, சமூக ஊடகங்கள் குறித்து. அதில் எழுப்பப்படும் கருத்துக்கள், விவாதங்கள் குறித்து உன்னிப்பாக கண்காணிக்கத் தொடங்கின.

இலங்கையிலும், கூட ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்தியதில் சமூக ஊடகங்களின் பங்கு கணிசமானது என்பதை மறுக்க முடியாது.

ஜனவரி 8 ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்சவைத் தோற்கடிப்பதில், சமூக ஊடகங்களின் மூலம் இளம் சமூகத்தினர் ஏற்படுத்திய ஆக்கபூர்வமான கருத்தாடல்களும், கருத்துக்களும் முக்கிய பங்காற்றியிருந்தன.

ஜனாதிபதி தேர்தல் காலங்களில், மகிந்த ராஜபக்சவினாலும் அவரது ஆதரவாளர்களினாலும் அரபுலக புரட்சி போல இலங்கையில் ஏற்படுத்தி விட முடியாது என்று கூறப்பட்டது. அத்தகையதொரு புரட்சிக்கான கருத்துக்கள் சமூக ஊடகங்களில் பரவியதை ராஜபக்ச அரசாங்கம் உணர்ந்திருந்தது. அதுபோலவே அப்போது மகிந்த ராஜபக்சவும் சமூக ஊடகங்களை தனது பிரசாரங்களுக்கு மிக கவனமாக பயன்படுத்தியிருந்தார்.

அதற்கென இந்திய நிபுணர்களை பணிக்கு அமர்த்தியிருந்ததாகவும் தகவல்கள் வெளியாகின. எனினும், மகிந்த ராஜபக்ச ஜனவரி 8 தேர்தலில் தோற்கடிக்கப்பட்டார்.

மகிந்த ராஜபக்ச தோற்கடிக்கப்பட்டதற்கும், சமூக ஊடகங்கள் கணிசமான செல்வாக்கைச் செலுத்தியது பின்னர் உறுதியாகியிருந்தது.

இந்தக் கட்டத்தில், மகிந்த ராஜபக்ச சமூக ஊடகங்களை தனது நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரங்களுக்கு அவ்வளவாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்றே கூறலாம். அவரது பேஸ்புக் கணக்கு இம்முறை தேர்தல் பிரசார காலங்களில் மிகமுக்கியமான நேரங்களில் எல்லாம் உறங்கிக் கொண்டிருந்தது. அதேவேளை, இந்தமுறை நாடாளுமன்றத் தேர்தலில், பெரும்பாலான வேட்பாளர்கள் சமூக ஊடகங்களை தமது பிரசாரங்களுக்கான சுலபமான வழிமுறையாகத் தெரிவு செய்திருந்தனர்.

அதிகம் கட்டுப்பாடுகள் இல்லாத- கூடுதல் சுதந்திரத்துடன் கருத்துக்களை வெளியிடக் கூடிய, ஒரு ஊடகமாக இது இருந்ததால், மரபுரீதியான பிரசாரங்களுக்கு மாற்றான அவதூறுப் பிரசாரங்களுக்கும் இது வாய்ப்பான களமாக இருந்தது.

பெரும்பாலான கட்சிகளும் வேட்பாளர்களும் கொள்கை ரீதியாக தமது நிலைப்பாட்டை முன்னிறுத்தி பிரசாரம் செய்யும் தகைதிறன் இன்றியே காணப்பட்டனர்.

 

தொல்காப்பியன் –

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*