திரைகாணும் ‘அடம்பன்” – புலம்பெயர் மக்களின் ஆதரவில் சாதனை படைக்குமா? (செவ்வி இணைப்பு)

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

ADAMBAN

ஈழத் தமிழ்த் திரைப்பட வரலாற்றில் புலம்பெயர் தமிழ்ப் படைப்பாளிகளின் பங்கைக் குறைத்து மதிப்பிட முடியாது. ஜரோப்பிய நாடுகளில் மேலோங்கி உள்ள தொழில்நுட்ப வளர்ச்சி, எந்தத் துறையானாலும் அதனைக் கற்றுக் கொள்வதற்குக் கிட்டும் வாய்ப்பு, அழகிய புறச் சூழல், நிதி வளம் எனத் திரைப்படத் தயாரிப்புக்குத் தேவைப்படும் அனைத்து வசதிகளும் கிட்டும் நிலையில் திரைப்படங்கள் அதிகமாகத் தயாரிக்கப்படுவதில் ஆச்சரியம் எதுவும் இல்லை.

அந்த வகையில் சுவிஸ் நாட்டில் இருந்து மற்றுமொரு திரைப்படம் திரைக்கு வருகின்றது. மேடை நாடகங்கள் ஊடாக அறியப்பட்ட கலைஞர் சிறி எழுதி, இயக்கிய ‘அடம்பன்” திரைப்படம் மக்கள் ஆதரவுடன் அரங்கம் நிறைந்த காட்சிகளாக அமைய வேண்டும் என இயக்குநரைப் போன்றே கதிரவன் குழுமமும் விரும்புகிறது.

பொதுமக்களின் இத்தகைய ஆதரவே படைப்பாளிகளின் உந்து சக்தி என்ற அசையாத நம்பிக்கையின் விளைவாக உருவானதே இந்தச் செவ்வி.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit