சுவிட்ஸர்லாந்தில் சீரடி சாயிபாபாவிற்கு இடம்பெற்ற குருபூர்ணிமா விழா (காணொளி, படங்கள் இணைப்பு)

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

சுவிட்ஸர்லாந்தின் பேர்ண் மாநிலத்தின் தூண் மாநகரத்தில் சீரடி சாயிபாபாவிற்கான குரு மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு குரு பூசைகள் இடம்பெறுவதுடன் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை கலந்துகொண்டு பஜனைகள் இசைத்துவருகின்றனர். குறுகிய காலத்தில் அமைக்கப்பட்ட இக் குரு மண்டபத்தில் நேற்றை தினம் வெள்ளிக்கிழமை “குருபூர்ணிமா” நிகழ்வு இடம்பெற்றது. ஆராதனைகளின்போது பால் அபிபேஷகம் செய்யப்பட்டு, பஜனைகள் இசைக்க, மராட்டிய மொழியில் அமைந்த வழிபாட்டு மந்திரங்கள் இசைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் பேர்ண் மாநிலம் தவிர்ந்த ஏனைய பிரதேசங்களிலிருந்தும் பெருமளவான மக்கள் வந்து கலந்துகொண்டிருந்தனர். இவ்வாறு பெருந்தொகையான மக்கள் கலந்துகொண்டிருந்தமை சீரடி சாயிபாபாவின் இந்நிகழ்வினை அனைவரும் ஏற்றுக்கொண்டிருந்தமையை எடுத்துக்காட்டியது. மேலும் இவ் ஆலயத்தில் “ராம நவமி, குரு பூர்ணிமா, விஜய தசமி” ஆகிய நிகழ்வுகளும் இடம்பெறுகின்றமைத சிறம்பம்சமாகும்.

அண்மைக்காலங்களில் சுவிட்ஸர்லாந்தில் ஆலயங்கள், ராஜ கோபுரங்கள், சித்திர தேர்கள் போன்றன சொந்த நிலங்களில் அமைக்கப்பட்டுள்ளதுடன் மேலும் அமைக்கப்பட்டுவருகின்றன. இவ்வாறு தனித்துவமான வழிபாட்டு முறைகளை எமது எதிர்கால சந்ததியினர் தொடர்ந்தும் பேணிப் பாதுகாத்துவருவார்களா???!

“ஓம் ஸ்ரீ சாயிராம், ஓம் ஸ்ரீ சாயிராம்”
Shirdi Sai Baba Temple in Switzerland Thun  (3) Shirdi Sai Baba Temple in Switzerland Thun  (1) Shirdi Sai Baba Temple in Switzerland Thun  (2) Shirdi Sai Baba Temple in Switzerland Thun  (10) Shirdi Sai Baba Temple in Switzerland Thun  (9) Shirdi Sai Baba Temple in Switzerland Thun  (8) Shirdi Sai Baba Temple in Switzerland Thun  (7) Shirdi Sai Baba Temple in Switzerland Thun  (6) Shirdi Sai Baba Temple in Switzerland Thun  (5) Shirdi Sai Baba Temple in Switzerland Thun  (4)

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*