விமானத்தின் கண்ணாடியை உடைத்துக்கொண்டு உள்ளே புகுந்த கழுகு !(படங்கள்)

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

விமானம் புறப்பட இருந்த தருணத்தில் விமானத்தின் முன்பக்க கண்ணாடியை உடைத்துக்கொண்டு உள்ளே புகுந்த கழுகு ஒன்று விமானியை தாக்கிய சம்பவம் பிரேஸிலில் அண்மையில் இடம்பெற்றுள்ளது.

பிரேஸில் மார்ஸல் குங்கா மாசடோ என்ற விமான நிலையத்தில் இரண்டு பயணிகளை ஏற்றிக்கொண்டு சிறிய விமானம் ஒன்று புறப்பட தயார் நிலையில் இருந்துள்ளது.

விமானத்தை மேலே எழுப்ப இரண்டு விமானிகள் முயற்சி செய்தபோது, திடீரென எதிர்புறத்திலிருந்து வந்த கழுகு ஒன்று விமானத்தின் முன்பக்க கண்ணாடியை உடைத்துக்கொண்டு உள்ளே புகுந்துள்ளது.

brazil_flight

எதிர்பாராமல் நடந்த இந்த விபத்தில் பலத்த காயமுற்ற அந்த கழுகின் இரத்தம் விமானிகள் மீதும், விமானிகள் அறையிலும் சிதறி பரவியுள்ளது.

மேலும் அதிர்ச்சியளிக்கும் விதமாக காயமுற்ற நிலையில் இருந்த அந்தக் கழுகு விமானிகளில் ஒருவரை தாக்க தொடங்கியுள்ளது. இதில், ஒரு விமானியின் முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

மேலும், விமானத்தின் கண்ணாடி உடைந்து சிதறியதில், உள்ளே இருந்த இரண்டு பயணிகளுக்கும் காயம் ஏற்பட்டுள்ளது.

கண் இமைக்கும் நேரத்தில் நிகழ்ந்த இந்த விபத்தை தொடர்ந்து, காயமுற்ற கழுகு வெளியே தப்பி பறந்துள்ளது.

விமானிகள் விமானத்தை மேலே எழுப்பாமல் அவசர அவசரமாக விமானத்தை நிறுத்தியுள்ளனர்.

விமானம் மேலே பறந்தவுடன் இந்த விபத்து நிகழ்ந்திருந்தால், விமானம் பாரதூரமான விபத்தை சந்தித்திருக்கவும் வாய்ப்புள்ளது.

பிரேஸிலில் அண்மையில் நிகழ்ந்த இந்த விபத்தின் வீடியோ இணையதளங்களில் வெளியாக பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit