சசிபெருமாள் மரணம் எதிரொலி: கன்னியாகுமரி மாவட்டத்தில் 4ஆம் தேதி முழு அடைப்பு போராட்டம்!

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

மதுவுக்கு எதிராக போராடி உயிரிழந்த சசிபெருமாளுக்காக, குமரி மாவட்டத்தில் வருகின்ற 4 ஆம் தேதி (செவ்வாய்கிழமை) முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று அனைத்துக்கட்சி கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.

கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக மதுவுக்கு எதிராக போராடி வந்த காந்தியவாதி சசிபெருமாள், நேற்று கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டம் அருகேயுள்ள, உண்ணாமலைக்கடையில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடையை மூடக்கோரி செல்போன் டவரில் ஏறி போராட்டம் நடத்தியபோது, திடீரென மரணம் அடைந்தார். அவரது உடல் இன்று ஆச்சாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் 3 டாக்டர்கள் குழுவால் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அது வீடியோவில் பதிவு செய்யப்படுகிறது.

இந்நிலையில், ஆச்சாரிப்பள்ளத்தில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. அ.தி.மு.க. தவிர்த்து நடைபெற்ற இந்த கூட்டத்தில் வருகின்ற செவ்வாய்கிழமை (4 ஆம் தேதி) கன்னியாகுமரி மாவட்டத்தில் முழு அடைப்பு போராட்டம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.

மேலும் இந்த கூட்டத்தில், சசிபெருமாள் தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளதை வாபஸ் பெற வேண்டும். சசிபெருமாளின் கோரிக்கைப்படி அரசு மதுக்கடைகளை உடனே மூட வேண்டும். சசிபெருமாள் இறப்புக்கு அரசு மரியாதை செலுத்த வேண்டும். சசிபெருமாள் மறைவுக்கு மாவட்ட நிர்வாகம் பொறுப்பேற்க வேண்டும் என்பது உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit