யாகூப் மேமன் இறுதிச்சடங்கில் தீவிரவாதிகள் பங்கேற்பு – திரிபுரா கவர்னர்!

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

மும்பை குண்டுவெடிப்பு குற்றவாளி யாகூப் மேமன் நேற்று முன்தினம் தூக்கிலிடப்பட்டான். அன்று இரவு மும்பையில் இறுதிச்சடங்கு நடந்தது. யாகூப் மேமன் இறுதிச்சடங்கில் தீவிரவாதிகள் பங்கேற்றதாக திரிபுரா கவர்னர் ததகட்டராய் சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:–

யாகூப் மேமன் இறுதிச் சடங்கில் பங்கேற்ற அனைவர் மீதும் (உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள்) உளவுத்துறையினர் கண்காணிப்பை தொடர வேண்டும். ஏனெனில் அவர்களில் பலர் தீவிரவாதிகள்.

இவ்வாறு கூறியிருந்தார்.

அவரது கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.  இதற்கு அவர் மற்றொரு டுவிட்டரில் பதில் அளித்துள்ளார். இதில் மாநிலத்தின் பாதுகாப்பு குறித்து கவலைப்பட வேண்டியது கவர்னரின் பொறுப்பு. தீவிரவாதத்தை தடுக்க யாகூப்பின் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்றவர்களை உளவுத்துறை கண்காணிக்க வேண்டும், வரும் முன் காப்பதே சிறந்தது’’ என்று தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறியிருப்பதாவது:–

நான் உளவுத்துறை கண்காணிப்பை தொடர வேண்டும் என்றுதான் கூறினேன். எந்த ஒரு சமூகத்தையும் குறிப்பிடவில்லை. எனவே என்னை மத சகிப்புத் தன்மையற்றவர் என்று குற்றம் சாட்ட முடியாது. கவர்னராக எனது பணி சமரசம் செய்து கொள்வதல்ல. நான் சொல்லாத கருத்தையும் குறிப்பிட்ட சமூகத்தை தாக்குவதாக சிலர் கண்டு பிடித்து சொல்கின்றனர்.

பொதுநல விவகாரத்தை பொதுமக்களின் கவனத்துக்கு கொண்டு வருவது எனது பணி.

இவ்வாறு கூறியுள்ளார்.

ததகட்டாராய் மேற்கு வங்காளத்தில் கடந்த 2002–ம் ஆண்டு முதல் 2006–ம் ஆண்டு வரை அம்மாநில பா.ஜனதா தலைவராக பொறுப்பு வகித்தார்.

கடந்த மே மாதம் திரிபுரா கவர்னராக நியமிக்கப்பட்டு பதவி ஏற்றார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends


Submit