ஜனாதிபதியும் பிரதமரும் சண்டையிடும் நிலைமை ஏற்பட்டால் நாட்டின் நிலைமை மோசமடையும்: ரணில்

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

“ஜன­வரி 8ஆம் திகதி இந்­நாட்டு மக்கள் ஒன்று சேர்ந்து மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை இந்­நாட்டின் ஜனாதிபதியாக்கினோம். அடுத்த ஐந்து வரு­டத்­திற்கு அவர்தான் எமது நாட்டு ஜனா­தி­பதி. எதிர்­வரும் 17 ஆம் திகதி புதிய நாடா­ளு­மன்றம் ஒன் றைத் தெரிவு செய்­வ­தற்­கான தேர்தல் இடம்­பெறப் போகி­றது. இந்தத் தேர்­தலில் இந்­நாட்டு ஜனா­தி­ப­தி­யோடு ஒத்துப் போகக் கூடியநாடா­ளு­மன்றம் அமைய வேண்­டுமா அல்­லது அவ­ரோடு முரண்­பட்­டுக்­கொண்டு செயற்­படக் கூடிய ஒரு நாடா­ளு­மன்றம் அமைய வேண்­டுமா என்­பதைப் பற்றி மக்கள் தீர்­மா­னிக்க வேண்­டி­யுள்­ளது” என பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தெரி­வித்தார்

புத்­த­ளத்தில் இடம்­பெற்ற தேர்தல் பிர­சாரக் கூட்­டத்தில் கலந்து கொண்டு உரை­யாற்றும் போதே அவர் இவ்­வாறு தெரி­வித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பா­ல­வுடன் இணைந்து செயற்­பட முடி­யு­மானால் இந்­நாட்டை அபி­வி­ருத்தி செய்ய முடியும். நாட்டை வளம் பெறச் செய்ய முடியும். இந்­நாட்டு மக்­க ளின் சிறந்­த­தொரு எதிர்­கா­லத்தை உறு­திப்­ப­டுத்த முடியும். மாறாக ஜனா­தி­ப­தியும் பிர­த­மரும் சண்­டை­யிட்டுக் கொள்­வார்­க­ளே­யானால் நாட்டு நிலை மோச­மாகப் பாதிக்­கப்­படும். எனவே மக்கள் சிந்­தித்து செயற்­பட வேண்டும்.

நாம் கடந்த ஜன­வரி எட்டாம் திகதி இந்­நாட்டில் நல்­லாட்­சி­யினை ஏற்­ப­டுத்­தினோம். இந்த நல்­லாட்­சியில் பிர­தா­ன­மாக நூறு துரித வேலைத்­திட்­டத்­தினை நடை­மு­றைப்­ப­டுத்தி அதன் ஊடாக மக்­க­ளுக்கு வழங்­கிய பல வாக்­கு­று­தி­களை நிறை­வேற்­றினோம். எரி­பொ­ருட் ­களின் விலை­களைக் குறைத்தோம்.

அத்­தி­யா­வ­சிய பொருட்­களின் விலை­களைக் குறைத்து மக்­களின் குடும்பச் செல­வினைக் குறைத்தோம். அரச உத்­தி­ யோ­கத்­தர்­களின் சம்­ப­ளத்தை அதி­க­ரித்தோம். எமது நூறு நாள் வேலைத்திட்டத்தில் இவ்­வாறு பல­வற்­றையும் செய்து இறு­தி யில் ஜனா­தி­ப­தியின் அதிகாரங்களையும் மட்டுப்படுத்தும் வகையில் யாப்புத் திருத்தத்தையும் நிறைவேற்றிளோம். இப் போது எமது நல்லாட்சியின் கீழ் தேர்தல் ஒன்றையும் நாம் நடாத்துகின்றோம்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*