ஒரு முறை நீல நிறமாக நிலவு தோன்றும் அரிய வகை அற்புதக்காட்சி!

பிறப்பு : - இறப்பு :

வான்வெளியில் எப்போதாவது நிகழும் அரிய நிகழ்வு ஒன்றை, விஞ்ஞானிகள் ‘ஒன்ஸ் இன் அ ப்ளூ மூன்’ என்று குறிப்பிடுகின்றனர். அப்படியான ஓர் அரிய நிகழ்வு நேற்று நடைபெற்றது.

அதாவது ஒரு மாதத்தில் ஒரு பவுர்ணமிதான் வரும். இதுவே இயற்கையின் நியதி. ஆனால் சில நேரங்களில் ஒரு மாதத்தில் 2 பவுர்ணமி வருவதும் உண்டு. இது மிகவும் அரிய நிகழ்வு, இப்படி, ஒரே மாதத்தில் 2 பவுர்ணமி நிகழ்கிறபோது, 2–வது பவுர்ணமி ‘நீல நிலவு’ (Blue Moon) என அழைக்கப்படுகிறது.

முதல் பௌர்ணமி கடந்த ஜூலை 2–ந் தேதி வந்தது. அடுத்த பௌர்ணமி நேற்று வந்தது. அப்போது வானில் தோன்றிய முழு நிலவே நீல நிலவு ஆகும். நீல நிலவு என்று கூறப்பட்டாலும், இதற்கும், பவுர்ணமி நிலவின் நிறத்துக்கும் எந்த தொடர்பும் கிடையாது. கடைசியாக இது போன்ற நிகழ்வு ஆகஸ்ட் 2012 நடந்தது.

அடுத்த நிகழ்வுக்கு 2018 ஜனவரி வரை காத்திருக்க வேண்டும்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit