நூறு நாட்களில் நல்லாட்சியை ஏற்படுத்தினோம் – பிரதமர் ரணில் விக்ரமசிங்க

பிறப்பு : - இறப்பு :

முல்லைத்தீவு முள்ளியவளைப் பகுதியில் ஐக்கிய தேசியக் கட்சியின் தேர்தல் பிரசாரக் கூட்டமொன்று இன்று நடைபெற்றது.

இதன் போது கருத்துத் தெரிவித்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க :

100 நாட்களில் யாரும் நினைத்திருக்காத நல்லாட்சியை நாம் ஏற்படுத்தினோம். இப்போது நாம் புதிய நாட்டை கட்டியெழுப்ப உத்தேசித்துள்ளோம். எனவே புதிய பாராளுமன்றத்தை ஏற்படுத்தி அதனை செய்ய 60 மாதங்களை உங்களிடம் எதிர்ப்பார்க்கின்றோம். மேலும் நாங்கள் இலங்கையின் சட்டத்திட்டங்களுக்கு அமைய செயற்படுவோம். அதுபோன்று எமது பல்வேறு பிரச்சினைகளை தீர்ப்பதற்கு தெற்காசிய நாடுகளை மையப்படுத்திய சத்திய ஆணைக்குழுவொன்றை நியமிப்பதற்கு நாங்கள் ஆலோசித்துள்ளோம்.
இதன்போது கருத்துத் தெரிவித்த மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம். சுவாமிநாதன்..

இந்த குறுகிய காலப்பகுதியில் ஐக்கிய தேசியக் கட்சி தமிழ் மக்களுக்கும் இங்கு வாழும் எல்லா மக்களுக்கும் எவ்வளவு விரிவான வேலைகளை செய்துள்ளார்கள் என்பது மக்களுக்குத் தெரியும்.1000 ஏக்கர் காணியை விடுவித்து மக்களுக்கு கொடுத்துள்ளோம். திருகோணமலையிலும் 1000 ஏக்கர் காணிகளை விடுவித்து மக்களுக்கு திருப்பி கொடுக்கின்றோம். அது 4 மாதங்களில் செய்த சேவை. இன்று முல்லைத்தீவில் உங்களுக்கு தண்ணீர் வசதிகள் இல்லை. வீடுகள் குறைவும் இருக்கின்றன. இந்த 2 விடயங்களையும் கௌரவ பிரதமரிடம் கூறியுள்ளேன். எப்போதும் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவதே ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit