300 விக்கெட் வீழ்த்திய ஐந்தாவது ஆஸ்திரேலியர் என்ற பெருமையை பெற்றார் ஜான்சன்!

பிறப்பு : - இறப்பு :

ஆஷஸ் தொடரின் 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பர்மிங்காமில் உள்ள எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிங்சில் 136 ரன்னில் சுருண்டது.

இங்கிலாந்து அணியின் ஆண்டர்சர்ன அபாரமாக பந்து வீசி 6 விக்கெட்டுகள் வீழ்த்தினார். ஆஸ்திரேலிய அணியின் ரோஜர்ஸ் தாக்குப்பிடித்து 52 ரன்கள் குவித்தார்.

அடுத்து களம் இறங்கிய இங்கிலாந்து அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 133 ரன்கள் எடுத்திருந்தது. ஜோ ரூட் 30 ரன்களுடனும், பேர்ஸ்டோவ் 1 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது.

இன்றைய ஆட்டத்தின் 2-வது ஒவரில் ஜான்சன் இரண்டு விக்கெட்டுகள் வீழ்த்தினார். அந்த ஓவரின் 3-வது பந்தில் பேர்ஸ்டோ (5 ரன்கள்) விக்கெட் கீப்பர் நெவிலிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.

அடுத்து வந்த ஆல்ரவுண்டர் ஸ்டோக்ஸ் ரன்ஏதும் எடுக்காமல் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.

பேர்ஸ்டோ விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் டெஸ்ட் அரங்கில் ஜான்சன் 300 விக்கெட் என்ற மைல்கல்லை தொட்டார்.

இந்த மைல் கல்லை தொடும் ஐந்தாவது ஆஸ்திரேலிய வீரர் இவராவார். இதற்கு முன் வார்னே, மெக்ராத், லில்லி, பிரெட் லீ ஆகியோர் 300 விக்கெட்டை கடந்துள்ளனர்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit