என்னை வைத்து இப்படியெல்லாமா வதந்தி பரப்புவாங்க??? – அஞ்சலி!

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

அமெரிக்க இளைஞனை காதலிப்பதாக வதந்தி பரவி உள்ளது என்று அஞ்சலி கூறினார்.

இது குறித்து அஞ்சலி அளித்த பேட்டி வருமாறு:–

ஜெயம் ரவியுடன் ‘சகலகலா வல்லவன்’ படத்தில் நடித்து முடித்துள்ளேன். இந்த படத்தில் எனக்கு கிராமத்து பெண் வேடம். இதற்காக கொஞ்சம் எடை போட வேண்டும் என்று டைரக்டர் சுராஜ் கேட்டுக் கொண்டார்.

இதற்காக சாப்பிட்டு எடை கூடினேன். தற்போது விஜய்சேதுபதியுடன் ‘இறைவி’ படத்தில் நடிக்கிறேன். இந்த படத்துக்காக எடையை குறைக்கும் படி டைரக்டர் கேட்டுக் கொண்டார். இதையடுத்து ஆறு கிலோ எடை குறைத்து இருக்கிறேன்.

எனக்கு அமெரிக்காவில் காதலன் இருப்பதாகவும் அதனால் அடிக்கடி அமெரிக்காவுக்கு சென்று விடுவதாகவும் வதந்தி பரவி உள்ளது. இதில் உண்மை இல்லை. தெலுங்கில் தயாரான ‘சித்ரகதா’ படத்தின் பெரும் பகுதி படப்பிடிப்பு அமெரிக்காவில் நடந்தது. அந்த படத்தின் கதையும் அமெரிக்காவில் நடப்பது போன்றதுதான்.

எனவே தான் அங்கு படப்பிடிப்பை நடத்தினார்கள். படப்பிடிப்பில் கலந்து கொள்ளத்தான் அடிக்கடி அமெரிக்காவுக்கு சென்று வந்தேன். அதை வைத்து இப்படி வதந்தி பரப்பி இருக்கிறார்கள்.

தமிழில் நான்கு படங்களிலும் தெலுங்கில் நான்கு படங்களிலும் தற்போது நடித்துக் கொண்டு இருக்கிறேன்.

இவ்வாறு அஞ்சலி கூறினார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit