புலி, ஸ்ரீமந்துடு படங்களுக்கிடையில் உள்ள ஒற்றுமைகள்!

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

இளைய தளபதி விஜய் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகியுள்ள புலி படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் ஆகஸ்ட் 2 ம் திகதி கோலாகலமாக நடைபெறவுள்ளது.

மகேஷ்பாபு நடிப்பில் உருவாகியிருக்கும் தெலுங்குப் படமான ‘ஸ்ரீமந்துடு’ படத்தின் தமிழ் டப்பான ‘செல்வந்தன்’ படத்தின் புரமோஷனுக்காக சென்னைக்கு வரும் மகேஷ்பாபு விஜய்யின் அழைப்பை ஏற்றுக்கொண்டு புலி படத்தின் ஆடியோ வெளியீட்டு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள உள்ளார்.

மேலும், விஜய்யின் புலிக்கும், மகேஷ்பாபுவின் ஸ்ரீமந்துடு படத்திற்கும் இடையே இரண்டு ஒற்றுமைகள் உள்ளது. ‘புலி’ படத்தின் நாயகியான ஸ்ருதிஹாசன்தான் ‘ஸ்ரீமந்துடு’ படத்திலும் கதாநாயகி.

‘ஸ்ரீமந்துடு’ புலி ஆகிய இரண்டு படங்களின் இசையமைப்பாளரும் தேவி ஸ்ரீ பிரசாத்தான். இவையனைத்தும் மகேஷ்பாபு புலி படத்தின் ஆடியோ வெளியீட்டுக்கு வர மற்றொரு காரணம்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*