பகவத் கீதையில் இருந்து கற்றுக்கொள்ள வேண்டியவை

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

பகவத் கீதை’ என்பதற்கு ‘கடவுளின் கீதம்’ என அர்த்தமாகும். உலகத்தில் நாம் இதுவரை கேட்டு படித்துள்ள ஆன்மீக போதனைகளில் சிறந்த புத்தகமாக இது கருதப்படுகிறது.

மகாபாரதத்தில் திரௌபதியின் பிறப்பு பற்றிய ரகசியம்!

mahabharatham1

போர் களத்தில் ஸ்ரீகிருஷ்ணருக்கும் அர்ஜுனனுக்கும் நடத்த உரையாடல்களை தான் இப்புத்தகம் அதிகமாக கூறுகிறது.

தன் சொந்தங்களை எதிர்த்து போரிட வேண்டிய சூழ்நிலையை எண்ணி அர்ஜுனன் வருத்தமும் குழப்பமும் அடைந்திருந்த போது ஸ்ரீகிருஷ்ணன் தன் உரையாடல் மூலம் அவனுக்கு தெளிவை உண்டாக்கினார்.

மகாபாரதம் சொல்லும் பயனுள்ள வாழ்க்கைப் பாடங்கள்!!!

இப்புத்தகம் சுய உணர்தலைப் பற்றி அதிகம் பேசுகிறது. இயற்கை மற்றும் வாழ்க்கையின் மீது ஆழமான பார்வையைக் கொண்டிருக்க விரும்பும் எவருக்கும் இது உதவியாக இருக்கும்.

நம்மில் பலருக்கும் இதைப் பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் இந்த நூற்றாண்டின் சிறந்த சிந்தனையாளர்களான ஐன்ஸ்டீன் மற்றும் காந்தி போன்றவர்கள் இந்த புத்தகத்தால் மகிழ்ந்து பெரும்பாலான போதனைகளைப் பின்பற்ற முயற்சி செய்தார்கள்.

பாண்டவர்கள் மற்றும் திரௌபதி பற்றி யாருக்கும் தெரியாத அதிர்ச்சியூட்டும் ரகசியங்கள்!

கண்டிப்பாக உண்மையான அறிவு மற்றும் சுய உணர்தலைப் பற்றி தான் இப்புத்தகம் அதிகமாக பேசுகிறது. அதனால் தான் அனைத்து பண்பாடுகள் மற்றும் பின்னணியை சேர்ந்த பலரும் இதனை தழுவி வாழ்கின்றனர். இப்போது நாம் பகவத்கீதையில் கொடுக்கப்பட்டிருக்கும் வாழ்க்கையைப் பற்றிய சில படிப்பினைகளைப் பற்றி பார்ப்போம்.

எதுவும் நிரந்தரம் இல்லை

bhagavad1

இந்த பிரபஞ்சத்தில் எதுவும் நிரந்தரம் இல்லை அது போலவே உங்கள் உடலும். எனவே உங்கள் உடலைக் கொண்டு உங்களை அடையாளப்படுத்துவது தேவையற்றது. உங்கள் நித்திய ஆத்மாவைத் தவிர அனைத்துமே நிலையற்றது.

நிலையற்றப் பொருட்களில் உங்கள் நம்பிக்கையை வைப்பது பயனற்றது. அவை விரைவில் அல்லது பின்னர் அழிந்து போகும் தன்மை கொண்டவை. மேலும் பற்றுதல் துன்பத்தையே தருகிறது.

செயலற்று இருப்பது முட்டாள் தனம்

bhagavad2

எழுதப்பட்டுள்ள உலகக் கடமைகளிலிருந்து தப்பிக்க முயற்சிக்கும் ஒருவர் ஏமாற்றப்படுவார். தனது பொறுப்புகளிலிருந்து தப்பிக்க முயற்சிக்காமல் ஒருவர் செயலாற்றும் போது உண்மையான விடுதலை சாத்தியமாகிறது.

முடிவு பற்றி கவலைப்படாத கடின உழைப்பு வேண்டும்.

bhagavad3

முடிவைப் பற்றிய கவலைகளை ஒதுக்கி வைக்கும் போது நீங்கள் கடினமாக உழைக்க முடியும் மற்றும் விளைவின் தன்மை குறித்த கவலை இல்லாமல் சந்தோஷமாக இருக்க முடியும்.

ஆசையை வெல்லுங்கள்

bhagavad4

ஒரு ஸ்திரமான மனதாலேயே ஆசையின் தன்மை மற்றும் அமைப்பை புரிந்து கொள்ள முடியும். மேலும் இது ஆசையின் கட்டுப்பாட்டில் இல்லாமல் சுதந்திரமாக இருக்கும்.

சுயநலம் உங்கள் ஞானத்தை மறைக்கும்

mahabharatham3

மனமானது சுயநலத்தில் அமிழ்ந்து இருப்பது ஒரு கண்ணாடியானது மூடுபனி அல்லது தூசியால் மூடப்பட்டிருப்பதற்கு ஒப்பானதாகும். சுயநலத்தை ஒதுக்கி வைக்கும் போது மனதில் தெளிவு நம்பிக்கை நிலவுகிறது.

சமநிலைத்தன்மை வேண்டும்

மிக அதிகமான அல்லது மிக குறைவான எதுவும் வாழ்கையில் சமநிலையற்றத் தன்மையை உருவாக்கும். எனவே உணவு தூக்கம் உடல் இன்பம் எதுவாயினும் சமநிலை அவசியம்.

சினம் உங்களை வஞ்சிக்கும்

mahabharatham4

சினம் உங்களை வஞ்சிக்கும். கோபம் உங்களை குழப்பமடையச் செய்யும். கோபத்துடன் செய்யும் செயல்கள் பயனற்றுப் போகும். ஒருவர் கோபமாக இருக்கும் போது மனமானது தர்க்கம் மற்றும் காரணங்களை இழக்கிறது.சினம் ஒரு மிகப்பெரிய மனிதரைக் கூட வீழ்த்தும்.

கடவுள் உங்களுக்குள்ளே இருக்கிறார்.

mahabharatham2

ஒரு உச்ச சக்தியானது பிரபஞ்சத்தின் அனைத்து இடங்களிலும் உயிருள்ள மற்றும் உயிரற்ற பொருள்களிலும் உள்ளது. மனிதன் இதில் ஒரு சிறிய துண்டு ஆவான்.

 

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*