அப்துல்கலாமின் எளிமை என்னை மட்டுமின்றி அனைவரையும் கவர்ந்தது! – கங்குலி

பிறப்பு : - இறப்பு :

அப்துல்கலாம் மறைவுக்கு விளையாட்டு பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து உள்ளனர். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், டெலிவிஷன் வர்ணனையாளருமான கங்குலி கூறியதாவது:–

அப்துல்கலாமின் எளிமை என்னை மட்டுமின்றி அனைவரையும் கவர்ந்தது. 2003–ம் ஆண்டு உலக கோப்பைக்கு பிறகு அவரை சந்தித்தேன். அவரிடம் உரையாடியதை பெருமையாக கருதுகிறேன். இந்திய வீரர்களுக்கு அவர் வாழ்த்து தெரிவித்தார்.

அவருக்கு கிரிக்கெட் குறித்து கொஞ்சம் தெரிந்து இருந்தது. விளையாட்டு முறை குறித்து நாங்கள் அவருக்கு விளக்கினோம். அவர் கையில் 2004–ம் ஆண்டு பத்மஸ்ரீ விருது பெற்றேன். இதை நான் பெருமையாக கருதுகிறேன்.

நாட்டின் ஜனாதிபதியாக இருந்த அப்துல்கலாம் உயர்ந்த கல்வியாளர். அறிவியல் வழிகாட்டி. ஒட்டுமொத்த இந்திய மக்களை கவர்ந்தவர். இளம் தலைமுறையினருக்கு மிகுந்த ஊக்கம் அறித்தவர். மாணவ–மாணவியர்களின் இதயங்களில் வாழ்ந்து கொண்டு இருப்பவர்.

என்றாவது ஒரு நாள் எல்லோரும் வாழ்க்கையை விட்டு செல்ல வேண்டியது தான். கடவுளின் கருணையால் அவருக்கு நல்ல முறையில் மரணம் ஏற்பட்டது.

இவ்வாறு கங்குலி கூறியுள்ளார்.

உலக செஸ் சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த் கூறும் போது, அப்துல்கலாம் மிகச் சிறந்த மனிதர். அனைவரது இதயங்களையும் தொட்டவர் என்று கூறியுள்ளார்.

முன்னாள் பிரபல பேட் மின்டன் வீரர் பிரகாஷ் படுகோனே கூறும் போது, அப்துல்கலாமின் மறைவு நாட்டுக்கு மிகப்பெரிய இழப்பு. அவரை பற்றி நான் படித்து இருக்கிறேன். அவரது அனைத்து பேச்சுகளையும் கேட்டு இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.

கிரிக்கெட் ஜாம்பவான் தெண்டுல்கர், வீராட் கோலி, புஜாரா, முன்னாள் ஆக்கி வீரர் தீபக் தாக்கூர், முன்னாள் பிரபல தடகள வீரர்கள் மில்காசிங், பல்பீர்சிங் உள்பட பல்வேறு விளையாட்டு வீரர்–வீராங்கனைகள் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit