மரண தண்டனை ரத்து சரியே: உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ரத்து செய்தது சரியே என்று உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சதாசிவம் தலைமையிலான அமர்வு கடந்த ஆண்டு பிப்ரவரி 18ஆம் தேதி ரத்து செய்து ஆயுள் தண்டனையாக குறைத்தது.

இதை எதிர்த்து மத்திய அரசு, உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்தது. இந்த மனுவை சதாசிவம் தலைமையிலான அமர்வு தள்ளுபடி செய்தது.

இதைத் தொடர்ந்து, மத்திய அரசு, உச்ச நீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு ஒன்றை தாக்கல் செய்தது. இந்த மனு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தத்து தலைமையிலான நீதிபதிகள் டி.எஸ்.தாகூர், அனில் ஆர்.தவே, ரஞ்சன் கோகேய், சிவகீர்த்திசிங் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, பேரறிவாளன் உள்பட 3 பேரின் மரண தண்டனையை ரத்து செய்தது சரியே என்று கூறிய நீதிபதிகள், மத்திய அரசின் மனுவை தள்ளுபடி செய்தது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit