மறைந்த “மக்கள் ஜனாதிபதி” அப்துல் கலாமின் உடல் 11 மணியளவில் மதுரையை அடையும்!

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

மறைந்த மக்களின் ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்களின் உடல் ராணுவ வாகனம் மூலம் டெல்லி பாலம் விமான நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கிருந்து விமானம் மூலம் மதுரைக்கு பயணத்தை துவங்கியுள்ளது.

ராஜாஜி மார்க் இல்லத்திலிருந்து ராணுவ வாகனங்கள் மூலமாக டெல்லி பாலம் விமான நிலையம் வந்தடைந்த அப்துல் கலாம் அவர்களின் உடல் மதுரை வரை விமானத்தில் கொண்டு செல்லப்படுகின்றது. இவ்விமானத்தில் மத்திய அமைச்சர்கள் மனோகர் பாரிக்கர், வெங்கையா நாயுடு, பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோரும் பயணம் செய்கின்றனர்.

நண்பகல் 11 மணி முதல் 11.30 மணியளவிற்குள் மதுரை வந்தடையும் அவரது உடல், முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையுடன் மதுரை விமான நிலையத்திலிருந்து ஹெலிகாப்டர் மூலமாக ராமேஸ்வரம் சென்றடைய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மதுரை விமான நிலையத்தில் ஆளுநர் ரோசைய்யா மற்றும் தலைமைச் செயலாளர் ஞானதேசிகனும் கலாமின் உடலைப் பெற்றுக் கொள்கின்றனர்.

அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த மதுரை விமான நிலையத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த், பிரேமலதா, பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் ஆகியோரும் விரைந்துள்ளனர். மேகாலயா மாநில ஆளுநர் சண்முகநாதனும் ராணுவ விமானத்தில் மதுரை வருகின்றார். கலாமின் உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலிக்குப் பின் ராமேஸ்வரத்தில் நாளை இறுதிச்சடங்கு நடைபெறவுள்ளது.

கலாமின் அண்ணன் வீட்டிற்கு கொண்டு செல்லப்படும் அவரது உடல் குடும்பத்தினர், உறவினர்கள் அஞ்சலி செலுத்திய பின் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கபடுகின்றது. மாலை 7 மணி வரை பொதுமக்கள் அஞ்சலி செலுத்த அனுமதிக்கப்படுவார்கள். பின் வீட்டருகிலுள்ள பள்ளிவாசலில் சிறப்பு தொழுகை நடத்தப்படுகிறது.

மேகாலயா மாநிலத்தில் நடைபெற்ற ஐ.ஐ.எம் கருத்தரங்கில் கலந்துகொண்டு மாணவர்களிடையே உரையாற்றியபோது மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார்.
இந்நிலையில், கலாமின் உடல் அடக்கம் செய்யப்படும் நாளைய தினம் அனைத்து கல்வி நிறுவனங்கள், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு பொது விடுமுறை விடப்படுகிறது. இதற்கான உத்தரவை ஆளுநர் ரோசய்யா பிறப்பித்துள்ளார்.

விமான நிலையத்தில் மு.க.ஸ்டாலின்

இதற்கிடையே மதுரை விமான நிலையத்திற்கு திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், நடிகர் விவேக் உள்ளிட்டோர் வந்து கலாம் உடலுக்காக காத்துள்ளனர்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*