கடாபி மகனுக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது லிபியா நீதிமன்றம்!

பிறப்பு : - இறப்பு :

லிபியாவில் அரசுக்கு எதிராக அமைதியான முறையில் நடந்த போராட்டங்களை ஒடுக்கியதாக தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் சர்வாதிகாரி முவம்மர் கடாபியின் மகன் சயீப் அல்-இஸ்லாமுக்கு நீதிமன்றம் இன்று மரண தண்டனை விதித்துள்ளது.

லிபியாவில் 1969-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு சர்வாதிகாரியாக இருந்து ஆட்சி செய்தவர் கடாபி. 2011ம் ஆண்டு கிளர்ச்சிப்படையினரால் இவர் பதவியில் விரட்டப்பட்டார். இதைத் தொடர்ந்து அவரை கிளர்ச்சிப்படையினர் பிடித்து சுட்டுக்கொன்றனர்.

கடாபியின் மகன் சயீப் அல் இஸ்லாம் கைது செய்யப்பட்டு அவர் உள்ளிட்ட பலர் மீது லிபியா கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கை விசாரித்த கோர்ட், கடாபியின் மகன் மற்றும், கடாபியின் உளவுத்துறை தலைவராக செயல்பட்ட அப்துல்லா அல்-செனுசி, முன்னாள் பிரதமர் பக்தாதி அல்-மஹ்மூதி ஆகியோருக்கு இன்று மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

தீர்ப்பு வழங்கப்படும் போது கடாபி மகன் இஸ்லாம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படவில்லை.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit