கலாமின் ‘புரா’ திட்டத்தை செயல்படுத்துவதே அவரிற்கு அளிக்கும் உண்மையான அஞ்சலி! – திருமாவளவன்

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறி இருப்பதாவது:–

முன்னாள் குடியரசுத் தலைவரும் தமிழ்நாட்டின் பெருமைக்குச் சான்றாகத் திகழ்ந்தவருமான அப்துல் கலாமின் திடீர் மறைவு பெரும் அதிர்ச்சியளிக்கிறது. தன்னை எப்போதும் ஓர் ஆசிரியராகவே கருதி வந்த அவர் மாணவர்களுக்குப் பெரும் உந்துசக்தியாகத் திகழ்ந்தார்.

செயற்கைக்கோள் தயாரிப்பில் முக்கிய பங்காற்றியவர், அணுகுண்டு வெடிப்புச் சோதனையின் முதன்மைக் காரணியாகத் திகழ்ந்தவர் என்பவற்றையெல்லாம் விட மாணவர்களிடம், இளைஞர்களிடம் எதிர்காலம் குறித்த நம்பிக்கையை ஏற்படுத்தியவர் என்பதே அவரது பெருமை.

குடியரசுத் தலைவராக இருந்தபோது ‘நகர்ப்புற வசதிகளைக் கிராமங்களுக்கும் அளிப்பது’ ‘புரா’ என்ற திட்டத்தைத் தயாரித்துச் செயல்படுத்தினார். அவரது பதவிக் காலத்துக்குப் பின் கடந்த காங்கிரசு ஆட்சிக் காலத்தில் அதை மேம்படுத்திச் செயல்படுத்தப் போவதாகக் கூறினார்கள்.

பா.ஜ.க பொறுப்பேற்றதும் அந்தத் திட்டம் முழுமையாக முடக்கப்பட்டுவிட்டது. நகர மயமாக்கத்தின் காரணமாக கிராமப்புறங்கள் மேலும் மேலும் புறக்கணிக்கப்பட்டு தேக்கத்தின், வளர்ச்சியின்மையின் உறைவிடங்களாக மாற்றப்படும் இன்றைய சூழலில் அப்துல் கலாமின் ‘புரா’ திட்டத்தை இந்திய அரசு தேசியத் திட்டமாக அறிவித்து நடைமுறைப்படுத்துவதே அவருக்கு இன்றைய ஆட்சியாளர்கள் செலுத்தும் உண்மையான அஞ்சலியாக இருக்கும்.

இந்தியாவின் எதிர்காலத்தை வளமானதாக்க ஓய்வின்றி உழைத்த மாமனிதர் அப்துல் கலாமிற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வீரவணக்கத்தைச் செலுத்துகிறோம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*