2019 ஆம் ஆண்டு உலக கோப்பையில் இந்திய அணிக்கு கோப்பை வென்று கொடுப்பதே எனது கனவு!

பிறப்பு : - இறப்பு :

2019-ம் ஆண்டு ஒருநாள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாடுவது தனது கனவாகும் என்று ஐ.பி.எல். சூதாட்ட வழக்கில் விடுதலை செய்யப்பட்ட வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த் கூறியுள்ளார்.

2019-ம் ஆண்டு ஒருநாள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாடுவது தனது கனவாகும் என்று ஐ.பி.எல். சூதாட்ட வழக்கில் விடுதலை செய்யப்பட்ட வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த் கூறியுள்ளார்.

ஐ.பி.எல். சூதாட்டத்தில் விடுதலை

கடந்த 2013-ம் ஆண்டு நடந்த ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் ‘ஸ்பாட் பிக்சிங்’ சூதாட்டத்தில் ஈடுபட்டதாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர்கள் ஸ்ரீசாந்த், அங்கீத் சவான், அஜித் சண்டிலா மற்றும் சூதாட்ட தரகர்கள் பலரும் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட கிரிக்கெட் வீரர்கள் உள்பட 36 பேர் மீதான குற்றச்சாட்டுக்கும் போதிய ஆதாரம் இல்லை என்று அனைவரையும் கடந்த சனிக்கிழமை டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் விடுதலை செய்து தீர்ப்பளித்தது.

சூதாட்டத்தில் சிக்கிய இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த், முதல் தர வீரர் அங்கீத் சவான் ஆகியோருக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் ஆயுட்கால தடை விதித்தது. அஜித் சண்டிலா விவகாரம் ஒழுங்கு நடவடிக்கை குழு முன்னிலையில் உள்ளது.

ஸ்ரீசாந்துக்கு உதவ தயார்

ஐ.பி.எல். சூதாட்ட வழக்கில் இருந்து 3 கிரிக்கெட் வீரர்களை நீதிமன்றம் விடுவித்தாலும், இந்திய கிரிக்கெட் வாரிய ஒழுங்கு நடவடிக்கை குழுவின் நடவடிக்கையில் (ஆயுட்கால தடை) மாற்றம் எதுவுமில்லை என்று இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்தது.

ஆனால் கேரள கிரிக்கெட் வாரியம் ஸ்ரீசாந்த் மீதான தடையை நீக்க வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு அழுத்தம் கொடுக்க முடிவு செய்துள்ளது.

இதற்கிடையில் கேரள அரசுக்கு சொந்தமான கொச்சி மேம்பாட்டு ஆணைய சேர்மன் வேணுகோபால் அளித்த ஒரு பேட்டியில், ‘ஸ்ரீசாந்த் எங்களை அணுகினால் அவர் வலைப்பயிற்சி செய்ய கொச்சி ஸ்டேடியத்தில் அனுமதிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்’ என்று அறிவித்துள்ளார்.

உலக கோப்பை கனவு

இந்த நிலையில் 32 வயதான கேரளாவை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த் அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:-

நான் எந்தவித தவறும் செய்யாத நிலையில் சூதாட்ட வழக்கில் நிம்மதியை பெற கோர்ட்டின் முடிவுக்காக சுமார் 2½ ஆண்டுகள் பொறுமையாக காத்து இருந்தேன். காலம் எல்லாவற்றையும் சரிப்படுத்தும் என்று நம்புகிறேன்.

2019-ம் ஆண்டு ஒருநாள் உலக கோப்பையில் இந்திய அணிக்காக விளையாடி கோப்பையை வெல்ல வேண்டும் என்பது எனது கனவாகும். இது சாத்தியமில்லாதது என்று உங்களுக்கு தோணலாம். ஆனால் என்னை பொறுத்தமட்டில் எனது திறமை மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது.

இந்த நம்பிக்கையால் தான் கேரளாவில் இருந்து இந்திய அணியில் இடம் பிடித்த 2-வது வீரர் என்ற பெருமையையும், 2 உலக கோப்பையை வென்ற வீரர் என்ற சிறப்பையும் பெற்றேன்.

என் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தில் இருந்தும் என்னை கோர்ட்டு விடுவித்து இருக்கிறது. நான் இன்று (நேற்று) பயிற்சியில் ஈடுபட்டேன். இந்திய கிரிக்கெட் வாரிய தடை காரணமாக கேரள கிரிக்கெட் சங்கத்தில் எனக்கு அனுமதி கிடைக்காவிட்டாலும் மற்ற மைதானங்களில் பயிற்சி செய்ய முடியும்.

தற்போது 20 சதவீத உடல் தகுதியுடன் தான் இருக்கிறேன். விரைவில் முழு உடல் தகுதியை எட்டுவேன். எனக்கு விளையாட அனுமதி கிடைத்து விட்டால் என்னால் சிறப்பான திறமையை வெளிப்படுத்தி அணியில் இடம் பிடிக்க முடியும்.

கிளப் அளவிலான போட்டியிலாவது விளையாட எனக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் வாரியத்தை கெஞ்சி கேட்டுக்கொள்கிறேன்.

நான் உள்ளூர் மற்றும் சர்வதேச போட்டியில் விளையாடும் போது துண்டு (டவல்) வைத்து இருப்பது வழக்கம். அதனை வைத்து நான் சூதாட்ட தரகர்களுக்கு சிக்னல் கொடுத்ததாக சொல்வது தவறானதாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.

 

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends


Submit