துணைவேந்தரை மாற்றுமாறு புதுவை பல்கலை மாணவர்கள் போராட்டம்: போராட்டத்தைக் கைவிடுமாறு போலீஸ் தடியடி!

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

துணைவேந்தரை மாற்றவும், விடுதி வசதிகள் செய்து தரக்கோரியும் போராட்டம் நடத்திய பல்கலைக்கழக மாணவர்கள் மீது தடியடி நடத்தியிருக்கிறது புதுச்சேரி காவல்துறை. ஆனால் மாணவர்களின் போராட்டம் தீவிரமடைந்திருப்பதால் இருநூறுக்கும் மேற்பட்ட போலீசார் துப்பாக்கிகளோடு பல்கலைக்கழக வாசலில் நிறுத்தப்பட்டிருக்கின்றனர். இதனால் பதற்றம் நிலவுகிறது.

புதுச்சேரி காலாப்பட்டில் இருக்கிறது புதுச்சேரி பல்கலைக் கழகம். இங்கு புதுவை மட்டுமல்லாமல் இந்தியா முழுவதிலும் உள்ள பிற மாநிலங்களில் இருந்தும் சுமார் நான்காயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். துணைவேந்த சந்திரா கிருஷ்ணமூர்த்தி மீதான ஊழல் குற்றச்சாட்டுகள், அது குறித்த தொடர் போராட்டங்கள், மாணவிகள் ஈவ் டீசிங் விவகாரத்தை சரியாக கையாளவில்லை என பல்கலைக் கழக நிர்வாகத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் அபராதம் விதித்தது, துணைவேந்தரின் ஆதரவு-எதிர் போன்றவைகளின் கோஷ்டி மோதல் என தொடர்ந்து சர்ச்சை வளையத்தில் சிக்கிக் கொண்டே இருக்கிறது புதுவை பல்கலை.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக, இந்த வருடம் புதிதாக சேர்ந்த முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு விடுதியில் தங்க போதுமான இடம் இல்லை என நிர்வாகத்தால் சொல்லப்பட்டது. அதனால் விடுதி வசதியை உடனே செய்து தர வேண்டும் என்று மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது விரைவில் மாணவர்களுக்கு வேண்டிய வசதிகளை செய்து தருவதாக பல்கலைக் கழக நிர்வாகம் சொன்னதால் போராட்டம் கைவிடப்பட்டது.

பின்னர் அதுகுறித்து எந்த ஏற்பாடும் தொடங்கப்படாததால், மாணவர்களுக்கு அடிப்படை வசதிகள், உயர்த்தப்பட்ட கட்டணம் குறைக்கப்பட வேண்டும், துணைவேந்தர் சந்திரா கிருஷ்ணமூர்த்தியை உடனடியாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கைகளோடு இன்று ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பல்கலைக்கழக வாசலில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பல்கலைக்கழக ஊழியர்களையும் உள்ளே நுழைய விடாமல் மாணவர்களின் போராட்டம் தொடர்ந்ததால், அங்கு காவல்துறையினர் குவிக்கப்பட்டனர்.

அவர்கள் மாணவர்களிடம் போராட்டத்தைக் கைவிடுமாறு சொல்லி நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது. மேலும் சைக்கிள்களை நுழைவு வாயிலில் கீழே போட்டு யாரும் உள்ளே வராதவாறு தரையில் படுத்துக் கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மாணவர்கள் மீது காவல்துறையினர் இலேசான தடியடி நடத்தினர். அதனால் மானவர்கள் சிதறி ஓடினர். பின்னர் மாணவர்கள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட அங்கு பதற்றம் ஏற்பட்டது.

இந்நிலையில் மாணவர்களுக்குள் கலந்து பேசி தங்களது போராட்டத்தை நான்கு மணியுடன் முடித்துக் கொண்டு நாளை காலையில் மீண்டும் தொடர போவதாகச் சொல்லி கலைந்து சென்றனர்.

மாணவர்களின் போராட்டம் மீண்டும் எந்நேரமும் தீவிரமாகும் என்பதால், காவல்துறையினர் அங்கு தொடர் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டிருக்கின்றனர்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*