அக்டோபரில் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்கிறது தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி!

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி வரும் அக்டோபர் முதல் டிசம்பர் வரை இரண்டரை மாதங்கள் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகள், 5 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள், 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாட திட்டமிட்டுள்ளது.

சுமார் 72 நாட்கள் இந்தியாவில் தென் ஆப்பிரிக்க அணி விளையாட உள்ளது. 2 மாதங்களுக்கும் மேலாக இந்தியாவில் தென் ஆப்பிரிக்க அணி சுற்றுப்பயணம் மேற்கொள்வது இதுதான் முதல் முறையாகும்.

அதேபோல், இந்தியாவுக்கு எதிராக இந்திய மைதானங்களில் முதன் முறையாக 20 ஓவர் போட்டிகளில் தென் ஆப்பிரிக்க அணி விளையாடவுள்ளது.

மற்றொரு சிறப்பம்சாக தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டனும் உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவருமான ஏபி டிவில்லியர்ஸ் தனது 100 வது டெஸ்ட் போட்டியை பெங்களூரில் நடைபெறும் 2 வது டெஸ்ட் போட்டியின் போது நிறைவு செய்கிறார்.

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் பெங்களூர் ராயல்ஸ் சேலஞ்சர்ஸ் அணிக்காகதான் ஏபி டி வில்லியர்ஸ் விளையாடி வருகிறார். என்பது குறிப்பிடத்தக்கது.

போட்டிக்கான கால அட்டவணை வருமாறு

  தேதி  மைதானம்   போட்டி
 அக். 2  தர்மசாலா  முதல் 20 ஓவர் போட்டி
அக்.5  கட்டாக்  2 வது 20 ஓவர் போட்டி
 அக்.8  கொல்கத்தா  3 வது 20 ஒவர் போட்டி
 அக்.11  கான்பூர்  முதல் ஒருநாள் போட்டி
 அக்.14  இந்தூர்  2 வது ஒருநாள் போட்டி
 அக்.18  ராஜ்கோட்  3 வது ஒருநாள் போட்டி
அக்.22  சென்னை  4 வது ஒருநாள் போட்டி
 அக்.25  மும்பை  5 வது ஒருநாள் போட்டி
 நவ (5-9)  மொகாலி  முதல் டெஸ்ட்
 நவ (14-18)  பெங்களூரு  2 வது டெஸ்ட்
 நவ (25-29)  நாக்பூர்  3 வது டெஸ்ட்
 டிசம்பர் (3-7)  டெல்லி   4 வது டெஸ்ட்

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*