சினிமா மாயையில் மாட்டி தவிக்கும் பரவை முனியம்மா!!!

பிறப்பு : - இறப்பு :

சினிமா ஒரு மாயை அங்கு புகழுடன் இருக்கும் வரைதான் வாழ்க்கை இனிக்கும். புகழ் மங்கி வாய்ப்பு குறைந்து வருமானம் போனால் வாழ்கையே நொந்துப் போகும் என்பதற்கு மற்றுமொரு சாட்சி பரவை முனியம்மா.

முனியம்மா அடிப்படையில் ஒரு நாட்டுப்புற பாடகி. அவரை சினிமா உலகம் வெறும் பாடகியா மட்டும் பார்க்காமல் ஒரு நடிகையாக, நாயகர்களுக்கு அம்மாவாக, பாட்டியாக வலம் வர வைத்து கொண்டாடியது. சமயங்களில் காமடியையும் கொடுத்து ரசிகர்களை சிரிப்பு கடலில் மூழ்க வைத்தது .

இப்படி சிரிப்பு, பாட்டு, நடிப்பு என்று கொண்டாட்டமாக இருந்த முனியம்மாவை வெளி நாட்டு தமிழர்களும் அழைத்து பாட வைத்து ரசித்தார்கள், கொண்டாடினார்கள் . ஒரு பிரபல தொலைக்காட்சியிலும் வாரம் தோறும் சமையல் குறிப்பு வழங்கி அசத்தினார் .

தன் பிழைப்பு இதில் அடங்கி இருந்தாலும் பிறரை சிரிக்க வைக்கவும், ரசிக்க வைக்கவும் முடிகிறதே என்று சந்தோசப்பட்டார் கிராமத்து பெண்மணியான முனியம்மா. நகரங்களில் இருபவர்களையே நாய் படும்பாடு பட வைக்கும் சினிமா.

கிராமத்து பெண் மணியை சும்மா விடுமா? வாய்ப்பு குறைந்து வறுமை சூழ்ந்து, வயோதிகம் தந்த நோயோடு தன் குடும்பத்தை காப்பாற்ற வேண்டிய சூழலில் இப்போது இருக்கிறார் முனியம்மா. ரேஷன் அரிசி சாப்பிட்டு ஜீவன் வாழ்வதாய் கூறும் முனியம்மா முதியோர் உதவித் தொகையை கேட்டு காத்திருக்கிறார்.

மருந்து வாங்குவதற்கு கூட அவரிடம் காசு இல்லை. அவருக்கு முதியோர் உதவி தொகைக் கூட தேவை இல்லை . கிராம கலைஞர்களுக்கு கொடுக்கப்படும் உதவித் தொகை கிடைத்தாலே அவர் கலைக்கு கிடைத்த அங்கிகாரமாக இருக்கும்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit