“என் உச்சி மண்டையில சுர்ருங்குது…” பாடலாசிரியரையே பதம் பார்த்த இயக்குனர்!

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

புலவர்கள் சாபம் பொல்லாது என்பார்கள். அண்ணாமலை புலவரா? கவிஞரா? பாடலாசிரியரா? அடுக்குமொழி வித்தகரா? யாராகவும் இருக்கட்டும்… அவர் விட்ட சாபத்தால் நொந்நே போய்விட்டாராம் ஒரு இயக்குனர். அட… இதென்ன கொடுமை?

இன்னும் சில தினங்களில் வெளியாகவிருக்கும் சகலகலா வல்லவன் படத்திற்கு இவரை பாடல் எழுத அழைத்தாராம் அப்படத்தின் இயக்குனர் சுராஜ். இருவரும் ஒரே காரில் இசையமைப்பாளர் வீட்டுக்கு போயிருக்கிறார்கள்.

வழியில், இதுவரைக்கும் எத்தனை பாட்டு எழுதியிருக்கீங்க? நீங்க விஜய்க்காக எழுதிய என் உச்சி மண்டையில சுர்ருங்குது பாட்டு எனக்கு ரொம்ப பிடிக்கும்? ஒரு பாடலுக்கு எவ்வளவு வாங்குறீங்க? என்றெல்லாம் பேச்சுக் கொடுத்துக் கொண்டே வந்தாராம். எல்லாவற்றுக்கும் பதில் சொன்ன அண்ணாமலை, ஒரு பாடலுக்கு ஐம்தாயிரம் வரைக்கும் வாங்குறேன் என்பதை மட்டும் சற்று அழுத்தியே கூறியிருக்கிறார்.

போனார்கள்… ஸ்பாட்டிலேயே உட்கார்ந்து முழு பாடலையும் எழுதிக் கொடுத்துவிட்டார் அண்ணாமலை. பாடலின் முதல் வரியே ஹிட் சாங்… என்றுதான் ஆரம்பிக்குமாம். ஆனால் முதல் வரியை அப்படி அமைத்துக் கொடுத்தவருக்கு அந்த பாடலுக்கான சன்மானம், ஹிட் சன்மானமாக இல்லை. ஏன்? வெறும் பத்தாயிரத்தை கவரில் போட்டுக் கொடுத்து அனுப்பிவிட்டார்களாம்.

நீங்களே என்னை கூப்பிட்டீங்க, எவ்வளவு ஒரு பாட்டுக்கு வாங்குறீங்கன்னு விசாரிச்சீங்க. உங்களுக்கு பிடிச்ச மாதிரி பாட்டும் எழுதி கொடுத்துட்டேன். நான் எவ்வளவு வாங்குறேன்னு தெரிஞ்சும் எழுத வச்ச பின்னாடி கழுத்தறுத்துட்டீங்களே, என் தமிழால சபிக்கிறேன். நீங்க நல்லாயிருப்பீங்களா? என்று பொங்கிவிட்டு கிளம்பிவிட்டாராம் அண்ணாமலை.

என்னய்யா… கவிஞன் இப்படி சாபம் விட்டுட்டு போறான்? என்று அதிர்ச்சியடைந்த டைரக்டர், தன் கை பணத்திலிருந்து ஐயாயிரத்தை உடனே ரெடி பண்ணி, மீண்டும் அண்ணாமலையை அழைத்து, “இந்தா புடிங்க… அந்த சாபத்தை மட்டும் வாபஸ் வாங்கிருங்க” என்றாராம்.

புலவனுக்கு அஞ்சுறாங்களோ, இல்லையோ? சாபத்துக்கு அஞ்சுதுய்யா ஊரு…

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*