மதநல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் அமைந்த 40 வலைத்தளங்கள் முடக்கம்!

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

இணையதளத்தில் மதநல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் கருத்துகளை பதிவு செய்து வந்த 40 வலைத்தளங்களை”தகவல் தொழில்நுட்ப சட்டம் 2009”-ன் கீழ் மத்திய அரசு முடக்கியுள்ளது.

தீவிரவாதிகளின் ஆயுதமாக இணையம்:

சமீப காலங்களில் தீவிரவாத இயக்கங்கள் மக்களின் மதவாதத்தை தூண்டும் வகையில் புகைப்படங்களையும் வீடியோக்களையும் இணையத்தளங்களில் பரப்பி வருகின்றன. மதவாதத்தையும் தீவிரவாதத்தையும் பரப்பும் ஆயுதமாக இணையத்தை பயன்படுத்தி வருகின்றனர். இது போன்ற செயல்கள் நாட்டின் அமைதியை சீர்குலைக்கும் என்பதால் மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது

தொலைத்தொடர்புத் துறை நடவடிக்கை :

மதவாதத்தை தூண்டும் வகையில் கருத்துகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோ பதிவுகள் அடங்கிய இணையதளங்களை தடை செய்ய மத்திய அரசு, கடந்த ஜூன் 29ம் தேதி உத்தரவிட்டது.

இதன்படி உத்தரவிடப்பட்ட 40 இணையதளங்களில் பெரும்பாலான இணையதளங்கள் ஏற்கனவே முடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தொழில்நுட்ப பிரச்னை காரணமாக சில இணையதளங்கள் செயல்பட்டு வருவதாகவும், விரைவில் அவை முடக்கபப்டும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*