14 வயது மாணவியை கற்பழித்து செல்போனில் நிர்வாண படம் எடுத்து மிரட்டிய நண்பியின் தந்தை-சகோதரன்: உடந்தையாய் இருந்ததால் நண்பியும் கைது!

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

திருவனந்தபுரம் அருகே உள்ள பத்தனாபுரத்தை அடுத்த திறவூர் பகுதியை சேர்ந்தவர் ரோயி (வயது 45). இவரது மகள் வின்சி (22). மகன் ராபின் (20).

வின்சியும் பத்தனாபுரத்தை சேர்ந்த ஒரு 14 வயது மாணவியும் தோழிகள். அந்த பெண் அந்த பகுதியில் உள்ள ஒரு அரசு பள்ளியில் 9–ம் வகுப்பு படித்து வருகிறார். அந்த மாணவி அடிக்கடி வின்சியை பார்ப்பதற்காக அவரது வீட்டிற்கு வந்து செல்வார்.

ஒரு நாள் அந்த மாணவி வின்சியை தேடி அவரது வீட்டிற்கு வந்தபோது வீட்டில் வின்சி இல்லை. அவரது தந்தை ரோயி மட்டும் இருந்தார். அந்த மாணவியை பார்த்ததும் விபரீத எண்ணம் தலைக்கேறியதால் அந்த மாணவியை ரோயி கற்பழித்தார்.

மேலும் இதுபற்றி யாரிடமும் கூறக்கூடாது என்று மிரட்டி அந்த மாணவியை அங்கிருந்து அனுப்பிவிட்டார். தோழியின் தந்தையால் கற்பழிக்கப்பட்ட அதிர்ச்சியில் இருந்து மீளமுடியாமல் தவித்த அந்த மாணவி தனக்கு நேர்ந்த கொடுமை பற்றி வின்சியிடம் கூறி அழுதார்.

ஆனால் வின்சியோ அதை சிறிதும் கண்டுகொள்ளவில்லை. மாறாக அவரும் அந்த மாணவியை இதை வெளியில் கூறக்கூடாது என்று மிரட்டினார். மேலும் அந்த மாணவியின் நிலை அறிந்த ரோயியின் மகன் ராபினும் மிரட்டி மாணவியை தனது ஆசைக்கு பலியாக்கினார்.

இந்த கொடுமை கடந்த சில மாதங்களாக நீடித்து உள்ளது. இந்த நிலையில் பள்ளிக்கு சென்ற மாணவி அங்கு திடீர் என்று மயங்கி விழுந்தார். இதனால் ஆசிரியைகள் அந்த மாணவிக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர்.

மாணவி மிகவும் சோர்வாக இருந்ததால் அவரிடம் உடல்நிலை பற்றி விசாரித்தனர். அப்போது தனக்கு நேர்ந்த கொடுமைகளை கூறி அந்த மாணவி கதறி அழுதார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த ஆசிரியைகள் இந்த தகவலை போலீசுக்கு தெரிவித்தனர்.

போலீசார் அங்கு சென்று அந்த மாணவியிடம் விசாரணை நடத்தினார்கள். அப்போது தன்னை ரோயியும் அவரது மகன் ராபினும் கற்பழித்ததாகவும். மேலும் தன்னை செல்போனில் நிர்வாண படம் எடுத்து மிரட்டியதாகவும் கூறினார். மேலும் இந்த கொடுமைக்கு அவர்களின் மகள் வின்சியும் உடந்தையாக இருந்ததாகவும் கூறி கதறினார்.

இதைதொடர்ந்து ரோயி, ராபின், வின்சி ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்ட அவர்கள் 3 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*