சொத்துக்குவிப்பு மேல் முறையீட்டு வழக்கு: ஜெயலலிதா உள்பட 4 பேருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் முதல்வர் ஜெயலலிதா உள்பட 4 பேர் மூன்று வாரத்தில் பதில் அளிக்க உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.

 

பெங்களூர் நீதிமன்றத்தில் நடைபெற்ற சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கடந்த ஆண்டு செப்டம்பர் 27ஆம் தேதி மைக்கேல் டி குன்ஹா தீர்ப்பளித்தார். மேல்முறையீட்டு வழக்கில் நால்வரையும் விடுவித்து நீதிபதி குமாரசாமி கடந்த மே 11ஆம் தேதி தீர்ப்பளித்தார்.

இந்நிலையில், ஜெயலலிதா, சசிகலா மற்றும் சுதாகரன், இளவரசி ஆகியோரின் விடுதலையை எதிர்த்து கர்நாடக அரசும், தி.மு.க பொதுச்செயலாளர் அன்பழகன் சார்பிலும் தனித் தனியாக மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

மேலும், ஜெயலலிதா மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பில் நீக்கப்பட்டுள்ள லெக்ஸ் பிராப்பர்டீஸ் உள்ளிட்ட 6 நிறுவனங்களையும் சேர்த்து விசாரிக்க வேண்டும் என்ற மனுவையும் தி.மு.க தாக்கல் செய்தது.

இந்த மனுக்கள் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பினாகி சந்திரகோஸ், ஆர்.கே.அகர்வால் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்போது முதல்வர் ஜெயலலிதா உள்பட 4 பேர் மூன்று வாரத்தில் பதில் அளிக்க நீதிபதிகள் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளனர்.

மேலும், ஜெயலலிதா உள்பட 4 பேரும் பதில் மனுத் தாக்கல் செய்த பின்னர் 3 வாரத்தில் கர்நாடக அரசு மற்றும் திமுக தரப்பினர் பதில் அளிக்க வேண்டும் என்ற உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை 8 வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.

சுப்பிரமணியன் சுவாமி மனு விசாரணைக்கு ஏற்பு

இதனிடையே, இந்த வழக்கில் தன்னையும் மனுதாரராக சேர்க்க கோரி பா.ஜனதா கட்சியின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தாக்கல் செய்த மனுவையும் உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டுள்ளது.

 

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*