ஆசாராம் பாபுவின் ஆசிரமத்தில் மர்மநபர்கள் கைவரிசை!

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

உத்தரபிரதேச மாநிலம் ஜாஜன்பூரில் சாமியார் ஆசாராம் பாபுவின் ஆசிரமம், மர்ம நபர்களால் சூறையாடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஜாஜன்பூர் மாவட்டத்தில் உள்ள ருத்ரபூர் கிராமத்தில் சாமியார் ஆசாராம் பாபுவுக்கு சொந்தமான ஆசிரமம் உள்ளது. இந்த நிலையில் நேற்று இரவு ஆசிரமத்திற்குள் நுழைந்த மர்ம நபர்கள் சிலர், அங்கு வைக்கப்பட்டிருந்த பொருட்களை சூறையாடினர். மேலும் புத்தகங்களுக்கு தீவைத்த அவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், இச்சம்பவத்தில் தொடர்புடைவர்களாக கருதப்படும் மூன்று பேரை கைது செய்தனர். அரசு சாட்சி கிரிபால் சிங் சுட்டுக் கொல்லப்பட்டதில் நாரயன் பாண்டே என்பவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ள நிலையில் ஆசிரமம் தாக்குலுக்கு உள்ளானது குறிப்பிடத்தக்கது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*