இலங்கை அணிக்கெதிரான டி20 கிரிக்கெட் தொடரில் இருந்து விலகினார் வகாப் ரியாஸ்!

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

பாகிஸ்தான் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான திகழும் வகாப் ரியாஸ், காயம் குணமடையாததால், இலங்கை அணிக்கெதிரான டி20 கிரிக்கெட் தொடரிலிருந்து விலகியுள்ளார்.

பாகிஸ்தான் அணி, இலங்கைக்கு சுற்றுபயணம் மேற்கொண்டு டெஸ்ட் போட்டி, ஒரு நாள் போட்டி, டி-20 போட்டிகளில் விளையாடி வருகின்றது.

இதில் ஏற்கனவே, டெஸ்ட், ஓருநாள் தொடரை பாகிஸ்தான் அணி கைப்பற்றியுள்ளது. இலங்கை அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடும்போது வகாப் ரியாசுக்கு இடது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது.

இதனால் டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரில் இருந்து நீக்கப்பட்டார். தற்போது காயம் குணமடைந்து உடற்தகுதியை நிரூபித்ததால் டி20 தொடரில் சேர்க்கப்பட்டார். ஆனால், அவரது கையில் உள்ள காயம் முற்றிலும் குணம் அடையவில்லை எனத் தெரிகிறது.

இந்நிலையில் நேற்று (சனிக்கிழமை) லாகூர் தேசிய கிரிக்கெட் அகாடமி மைதானத்தில் பந்து வீசி பயிற்சி எடுத்த பின்னர், தான் 100 சதவீதம் பந்துவீச இன்னும் ஒரு வாரம் ஆகும்” என்று ரியாஸ் தனது டுவிட்டரில் குறிப்பிட்டிருந்தார்.

இதனால் அவருக்குப்பதிலாக ஷியா-உல்-ஹக் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இவரும் இடது கை வேகப்பந்து வீச்சாளர்தான். 22 வயதாகும் இவர் இதுவரை சர்வதேச போட்டியில் விளையாடவில்லை. என்பது குறிப்பிடதக்கது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit