இந்திய ஆண்கள் ஹாக்கி அணிக்கு புதிய பயிற்சியாளர் நியமனம்!

பிறப்பு : - இறப்பு :

இந்திய ஆண்கள் ஹாக்கி அணியின் புதிய பயிற்சியாளராக, உயர் செயல்பாட்டு இயக்குனராக இருந்து வந்த ரோலன்ட் ஓல்ட்மான்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஹாக்கி இந்தியா தலைவர் நரிந்தர் பத்ராவுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாட்டை தொடர்ந்து, இந்திய ஹாக்கி அணியின் பயிற்சியாளர் பால் வான் ஆஸ் பதவிநீக்கம் செய்யப்பட்டார்.

கடந்த ஜனவரி மாதம் பயிற்சியாளராக பொறுப்பேற்ற வான் ஆஸ் 2018ம் ஆண்டு வரை ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த நிலையில், அவர் டிஸ்மிஸ் செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

துணை பயிற்சியாளர் ஜூட் பெலிக்சும் நேற்று பதவி விலகுவதாக அறிவித்தார். இந்த நிலையில், ரோலன்ட் ஓல்ட்மான்ஸ் (நெதர்லாந்து, 61 வயது) புதிய பயிற்சியாளராக நியமிக்கப்படுவதாக ஹாக்கி இந்தியா அறிவித்துள்ளது.

அடுத்த ஆண்டு ரியோ ஒலிம்பிக் போட்டி வரை பயிற்சியாளராக செயல்பட ஓல்ட்மான்ஸ் ஒப்புக் கொண்டுள்ளார். கடந்த 2009ல் இருந்து இதுவரை ஜோஸ் பிராசா, மைக்கேல் நாப்ஸ், டெர்ரி வால்ஷ், பால் வான் ஆஸ் என 4 பயிற்சியாளர்கள் நீக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit