மேட்ச் பிக்சிங் வழக்கிலிருந்து விடுதலையாகும் ஐ.பி.எல் கிரிக்கட்டின் முன்னணி வீரர்கள்!

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

2013ம் ஆண்டு நடந்த ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில், மேட்ச் பிக்சிங் முறைகேடு வழக்கில் கைதான ஸ்ரீசாந்த், அங்கீத் சவான், அஜய் சண்டிலா ஆகியோர் உள்பட 16 பேரை நேற்று (சனிக்கிழமை) டெல்லி நீதிமன்றம், விடுதலை செய்துள்ளது.

இவர்கள் மீதான குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இல்லை என கூறியே இவர்களை விடுவித்துள்ளது. 6-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளின் போது, இந்திய அணியின் முன்னணி வீரராக வலம் வந்த ராஜஸ்தான் றோயல்ஸ் அணிக்காக விளையாடிய ஸ்ரீசாந்த் மற்றும் அஜீத் சண்டிலா, அங்கீத் சவான் உள்ளிட்டோர் பிக்சிங்கில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டி டெல்லி பொலிஸார் வழக்குப்பதிவு செய்தனர்.

இதனால் இம் மூன்று பேருக்கும் ஆயுள்கால தடை விதித்து கிரிக்கெட் வாரியம் தீர்ப்பளித்தது. ஐ.பி.எல். பிக்சிங் வழக்கு டெல்லி நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், இந்த வழக்கில் தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப்பத்திரிகையில் 42 பேரின் பெயர் இடம்பெற்றிருந்தது. இவர்களில் 6 பேர் தலைமறைவாக உள்ளனர்.

இந்த வழக்கில் மும்பை நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் மற்றும் அவரது உதவியாளர் சோட்டா ஷகீல் ஆகியோரை தேடப்படும் குற்றவாளிகளாக நீதிமன்றம் அறிவித்துள்ளது.

இந்த நிலையில் ஸ்ரீசாந்த், அஜித் சாண்டிலா, அங்கீத் சவான் ஆகியோர் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்வது குறித்து நேற்று டெல்லி நீதிமன்றம் முடிவு செய்யும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி நேற்று நீதிமன்றத்தில் இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, ஸ்ரீசாந்த் உள்ளிட்ட மூன்று வீரர்கள் உட்பட 16 பேருக்கெதிரான குற்றச்சாட்டுகளுக்கு போதுமான ஆதாரம் இல்லை எனக் கூறிய நீதிபதி, அவர்களுக்கு எதிரான எந்த ஆதாரத்தையும் பொலிஸார் முன்வைக்கவில்லை என்று குறிப்பிட்டார்.

எனவே, 16 பேர் மீதான குற்றச்சாட்டுகளும் தள்ளுபடி செய்யப்படுகின்றன என்று நீதிபதி தெரிவித்தார். இதனால் அவர்கள் மேட்ச் பிக்சிங் வழக்கில் இருந்து விடுவிக்கப்படுகிறார்கள்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit