தத்துவம் பேசும் தத்துவ நாயகி!

பிறப்பு : - இறப்பு :

தெலுங்கில் வெற்றிக்கொடி நாட்டிய “மிர்ச்சி’யை தழுவி “மாணிக்யா’, “அத்தாரிண்டிக்கி தாரேதி’யைத் தழுவி “ரன்னா’ ஆகிய கன்னடப்படங்களை தயாரித்தும், நடித்தும் வெற்றிக்கனி பறித்தபிறகு, சக்சஸ் ஃபார்முலாவை கண்டுபிடித்த மகிழ்ச்சியில் இருக்கிறாராம் நடிகர் கிச்சா சுதீப்.

கடந்த 5 ஆண்டுகளில் தெலுங்கில் வெற்றிபெற்ற படங்களின் பட்டியலை தயாரித்துவரும் சுதீப், 2013-இல் வெளியாகி ஹிட்டான “பலுபு’ தெலுங்குப் படத்தை கன்னடத்தில் ரீமேக் செய்யத் திட்டமிட்டுவருகிறாராம். புதிய கதைகளை உருவாக்க நேரத்தை விரயமாக்கி, வயிற்றில் நெருப்பை கட்டிக்கொண்டு படத்தின் ரிசல்ட்டுக்கு காத்திருப்பதைவிட, ஏற்கெனவே வெற்றிபெற்ற கதையை படமாக்குவது எளிதானது என்று கருதுகிறாராம் சுதீப்.

ஏற்கெனவே நடிகர் வி.ரவிச்சந்திரன் பின்பற்றிய இந்த ஃபார்முலாவால் ஈர்க்கப்பட்டுள்ள சுதீப், இனிமேல் இப்படித்தான் படம் எடுப்பேன் என்று அடம்பிடிக்கிறாராம். கன்னடத்தில் அறிமுகமாகி, தமிழ், தெலுங்கு படங்களில் பிஸியாகி இருக்கும் நடிகை பிரணிதா கன்னடப்படங்களில் நடிக்க எப்போதும் தயக்கம் காட்டுவதில்லையாம்.

தற்போது, “எ செகன்ட் ஹாண்ட் லவ்வர்’ என்ற கன்னடப்படத்தில்ஒப்பந்தமாகியிருக்கிறார். “பாடல், காட்சி அமைப்பு போன்ற தொழில்நுட்ப காரணங்களைப் போலவே படத்தின்பெயரும் வெற்றிக்கு அச்சாரமிடும். “எ செகன்ட் ஹாண்ட் லவ்வர்’ படப்பெயர் எனக்கு மிகவும் பிடித்துவிட்டது. என்னை போலவே ரசிகர்களுக்கும் படத்தின் பெயரும் படமும் பிடிக்கும்’ என்று நம்புகிறேன் என்று நம்பிக்கை குலுங்க கூறுகிறார் பிரணிதா.

திரைநட்சத்திரமாக உயர்ந்தபிறகும் பள்ளி மாணவியாக வீட்டுப்பாடம் எழுதும் பழக்கத்தை இன்றும் கடைபிடித்துவருகிறாராம் நடிகை சஞ்சனா. தான் நடிக்கும் பாத்திரத்தின் முக்கியத்துவம், வாய்ப்புகளை ஆராய்ந்தபிறகே படங்களை நடிக்க ஒப்புக்கொள்கிறாராம்.
படத்தில் ஒப்பந்தமானபிறகு, தான் நடிக்கும் கதாபாத்திரத்திற்கு உயிர்கொடுக்க வீட்டுப்பாடத்தை போல வசனத்தை தனியாக ஒத்திகை செய்துபார்க்கும் பழக்கத்தை வளர்த்துக்கொண்டிருக்கிறாராம். என்னை நம்பி முதலீடுசெய்யும் தயாரிப்பாளருக்கும், படம் பார்க்கும் ரசிகர்களுக்கும் மனதிருப்தியை வழங்குவதற்காகவே அர்ப்பணிப்பு உணர்வுடன் படங்களில் நடிக்கிறேன் என்று தன்னை சந்திக்கும் இயக்குநர்களிடம் தத்துவம் பேசி அசத்துகிறார் சஞ்சனா.

லேட்டஸ்ட்டாக “மைலாரிவுக்குப் பிறகு கபிரா’ என்ற கன்னடப் படத்திற்காக நடிகர் சிவராஜ்குமாருடன் மீண்டும் ஜோடி சேர்ந்திருக்கும் சஞ்சனா, கபீர்தாஸ் வாழ்க்கையைச் சித்தரிக்கும் வரலாற்றுப் படத்தில் முதல்முறையாக நடிப்பதால் உற்சாகமாகியிருக்கிறார். இப்படத்திற்காக கதகளி நடனத்தை கடும் பயிற்சிக்குப்பின் கற்றுத் தேர்ந்து ஆடியிருக்கிறார்.

“மேற்கத்திய நடனத்தில் போதுமான பயிற்சி பெற்றிருந்தாலும், கதகளி நடன அசைவுகளை கற்பது கொஞ்சம் கடினமாகத்தான் இருந்தது. சோர்வுக்கு இடம் தராமல் நடனத்தைக் கற்று ஆடியது மனதிற்கு நிம்மதியாக உள்ளது’ என்கிறார் நடிகை சஞ்சனா.

தென்னகத்தைக் கலங்கடித்த சந்தனக்கடத்தல் வீரப்பனை சுட்டு வீழ்த்திய பரபரப்பான அந்த கடைசி நிமிடங்களை ஷூட் செய்கிறார் இந்தியாவின் பிரபல இயக்குநர் ராம்கோபால் வர்மா. இந்திய காவல்துறை வரலாற்றில் மைல்கல்லாக கருதப்படும் வீரப்பனின் வீழ்ச்சியை “கில்லிங் வீரப்பன்’ என்ற பெயரில் கன்னடம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் படமாக்கிவருகிறார் வர்மா.

வீரப்பனாக நடிகர் சந்தீப் பரத்வாஜ், ஐபிஎஸ் அதிகாரி விஜயகுமாராக சிவராஜ்குமாரும் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார்கள். படத்தில் மசாலா சேர்ப்பதற்காக நடிகைகள் பருல்யாதவ், யக்னாஷெட்டி புக் ஆகியிருக்கிறார்கள். வீரப்பன் மனைவி முத்துலட்சுமி வேடத்தில் யக்னாஷெட்டி நடிக்கிறாராம்.

ராம்கோபால்வர்மா இயக்கும் பரவசத்தை உணர அனைவரும் பட ஷூட்டிங்கிற்காக ஆவலோடு காத்திருக்கிறார்களாம். முன்னாள் அமைச்சர் எச்.எம்.ரேவண்ணா தனது மகன் அனுப் நடிக்க, பிரமாண்டமாக தயாரிக்கும் “லக்ஷ்மணா’ படத்தில் கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதால் 32 பற்களும் தெரியும்படி உற்சாக வலம் வருகிறாராம் நடிகை மேக்னாராஜ்.

கன்னடம் மற்றும் மலையாளப்படங்களில் மிகவும் பிஸியாக இருந்துவரும் தனக்கு “லக்ஷ்மணா’ பிரேக் படமாக அமையும் என்ற நம்பிக்கையில் காத்திருக்கிறாராம் மேக்னாராஜ். இதற்காக மலையாளத்தில் நடித்துவரும் “ஹலேலூயா’, கன்னடத்தில் “புஜங்கா’ ஆகிய படங்களை விரைவில் முடிக்கும்வகையில் கால்ஷீட் கொடுத்திருக்கிறாராம்.

மேக்னாராஜ் நடித்துள்ள “ஆட்டகாரா’ படம் ஜூலையில் வெளியாகத் தயாராக உள்ளது. இந்தப் படத்தின் ரிசல்ட்டையும் மேக்னாராஜ் மிகவும் எதிர்ப்பார்க்கிறாராம்.
Previous Page

http://www.kathiravan.com/?page_id=1302

One comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit