காதலியின் வயிற்றில் இருக்கும் குழந்தையை ரூ.2 லட்சத்திற்கு விற்க முயன்ற காதலன் கைது!

பிறப்பு : - இறப்பு :

திருவள்ளூர் பகுதியில், தனது காதலியின் வயிற்றில் இருக்கும் குழந்தையை ரூ.2 லட்சத்திற்கு விற்க முயன்ற காதலனை காவல்துறையினர் கைது செய்தனர்.

திருவள்ளூரை அடுத்துள்ள கொண்டாஞ்சேரி காலனியைச் சேர்ந்தவர் ஜான்விக்டர். இவரது பக்கத்து வீட்டில் வசிப்பவர் பாரதி. இவர்கள் இருவரும் நண்பர்களாகப் பழகி வந்தனர்.

இந்த நட்பு நாளடைவில் காதலாக மாறியது. இதைத் தொடர்ந்து, அவர்கள் இருவரும் நெருங்கிப் பழகினர். இந்தநிலையில் பாரதி கர்ப்பம் அடைந்தார்.

இந்நிலையில், தான் கர்ப்பம் அடைந்திருப்பது குறித்து, ஜான்விக்டரிடம் தெரிவித்த பாரதி தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தியுள்ளார்.

பாரதி கர்ப்பமாக இருப்பதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த ஜான்விக்டர், கர்ப்பமாக இருக்கும் போது திருமணம் செய்ய முடியாது. எனவே கருவை கலைத்தால் திருமணம் செய்து கொள்கிறேன் என்று கூறியுள்ளார். இதற்கு பாரதி சம்மதித்துள்ளார்.

இதைத் தொடர்ந்து, பாரதியை ஜான்விக்டர் பூந்தமல்லிக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்குள்ள ஒரு மருத்துவமனையில், கருக்கலைப்பு செய்ய வேண்டும் என்று அங்கிருந்த மருத்துவரிடம் கூறியுள்ளனர்.

இந்நிலையில், பாரதியை பரிசோதனை செய்த மருத்துவர், அவரது வயிற்றில் இருக்கும் கரு வளர்ந்து விட்டது என்றும், எனவே, கருக்கலைப்பு செய்தால் தாய் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்றும் கூறி மறுத்துள்ளார்.

இதனால் ஏமாற்றம் அடைந்த ஜான்விக்டர், பாரதியை பூந்தமல்லியில் உள்ள நண்பர் ஒருவரின் வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார். அவரிடம் தாங்கள் கணவன் – மனைவி என்று கூறி தங்கியுள்ளனர்.

அங்கு, பாரதியை வெளியில் எங்கும் செல்ல விடாமல், ஒரு அறைக்குள்ளேயே ஒரு வார காலம் பூட்டி வைத்துள்ளார்.

மேலும், நண்பர் ஒருவரிடம் தொலைபேசியில் பேசிய ஜான்விக்டர், தனது காதலியின் வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு ரூ.2 லட்சத்துக்கு விலை பேசி விற்கமுயன்றதாகக் கூறப்படுகிறது.

விக்டர் இவ்வாறு செல்போனில் பேசியதைக் கேட்டு பாரதி அதிர்ச்சி அடைந்துள்ளார். இதைத் தொடர்ந்து, அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

பின்னர், அந்த வழியாகச் சென்ற ஒருவரிடம், தனது நிலையை எடுத்துக் கூறினார். அவர்களது உதவியுடன் தனது பெற்றோருடன் பேசியுள்ளார்.

தனது மகளின் நிலையை அறிந்த பாரதியின் தந்தை கணேசன், உறவினர்களுடன் சென்று மகளை மீட்டு வந்து திருவள்ளுர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

பாரதியிடம் விசாரணை நடத்திய மகளிர் காவல்துறையினர், இது குறித்து வழக்குப் பதிவு செய்து ஜான்விக்டரை கைது செய்தனர். அவரிடம் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், ஜான்விக்டருக்கு உதவிய நண்பர்களை காவல்துறையினர் தொடர்ந்து தேடி வருகின்றனர்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit